ஜமாபந்தி மனு 2023 ( jamabandi tamil nadu 2023 ) - வருவாய் தீர்வாயம் என்றும் இதனை அழைப்பார்கள். இந்த ஜமாபந்தி என்பது அனைத்து வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் ஒன்றாக கூடும் இடமாகும். மேலும் மக்களும் அரசு அதிகாரிகளும் ஒன்றாக கூடும் கூட்டம் என்பதால் இதனை சமபந்தி என்பார்கள்.
வருடத்தில் ஒருமுறை இந்த கூட்டம் பசலி ஆண்டில் நடைபெறும். பொதுவாகவே ஜூன் மாதம் அனைத்து வருவாய் வட்டங்களில் இந்த கூட்டம் நடைபெறும். இது ஒவ்வொரு ஊர்களுக்கும் மாறுபடும். சரியான தேதியை தெரிந்துகொள்ள அந்தந்த மாவட்ட இணையத்தளம் அல்லது உள்வட்டங்களில் நேரடியாக கேட்கலாம்.
2. நில ஒப்படை
4. இலவச பட்டா
7. இதர வருவாய் சம்பந்தப்பட்ட கேள்விகள், மனுக்கள் கொடுக்கலாம்.
குறிப்பு
ஜமாபந்தி நடக்கும் இடத்தில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றோர்கள் கலந்து கொள்வார்கள். ஒரு சில நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்புண்டு. இந்த ஜமாபந்தி கூட்டமானது 3 லிருந்து 10 நாட்கள் நடக்கும்.