கடைகளுக்கு மின் கட்டணம் ( commercial electricity rate per unit in tamilnadu 2023 ) - வீடு, வணிகம், குடிசை, தொழிற்சாலைகள் மற்றும் விசைத்தறி என பல்வேறு பயன்பாட்டிற்காக மின்சாரம் தேவைப்படுகின்றது. இதில் வீடு, குடிசை தொழில் மற்றும் விசைத்தறி செய்பவர்களுக்கு 0 முதல் 100 யூனிட் மின்சாரம் இப்போது வரை இலவசமாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்து வருகின்றது.
தற்போது மின் கட்டணம் மட்டுமில்லாமல் மின் இணைப்பு கட்டணம், மீட்டர் பழுது, இடமாற்றம், தற்காலிக மின் இணைப்பு என அனைத்திற்கும் கட்டணங்கள் மின்சார வாரியம் உயர்த்தியுள்ளது.
வீடுகளுக்கு தற்போது 4.50 ரூபாய் ஒரு யூனிட்டிற்கு மக்கள் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் ஒவ்வொரு 100 யூனிட்டிற்கும் யூனிட்டின் விலை ஏறிக்கொண்டே இருக்கும். மேலும் அதற்கு நிரந்தர கட்டணமும் கட்ட வேண்டும். அந்த வகையில் வணிக பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும் கடைகளுக்கு ரூபாய் 8.50 ரூபாய் ஒரு யூனிட்டிற்கு கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது.
இதையும் பார்க்க: மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி