கடன் கொடுக்கும் முறை

கடன் கொடுக்கும் முறை - பொதுவாக மக்கள் தேவைகளுக்கு மீறி அதிகமாகவும் அல்லது உரிய நேரத்தில் அவசர தேவைகளுக்காகவும் கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் நேரத்தில் கடன் கொடுப்பவர்களும் அதிக வட்டி கொடுப்பார்கள் என நினைத்து கொண்டு கடன் தருவர்களும் இருக்கிறார்கள். வட்டி வீதம், திருப்பி செலுத்த கூடிய நாள் மற்றும் ஜாமீன் இவையெல்லாமே வெறும் வாய்மொழியாய் கடன் தருபவர்கள் கடன் வாங்குபவர்களிடம் கூறுவார்கள். அவர்களும் அவசரம் மற்றும் பிற தேவைகளுக்காகவும் உடனடியாக பணத்தை வாங்குவார்கள்.

கடன் கொடுக்கும் முறை


ஒரு சில மாதங்களுக்கு வாங்கிவர் பணம் தர  முடியாது அல்லது கொஞ்ச நாள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என சொன்னால் கொடுத்தவருக்கு மிகவும் கோபம் மற்றும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். இதனால் பணம் வருவது  சிரமம் ஏற்படும். இதனை ஒழிக்கவே கடன் தருபவர்கள் எல்லாம் 20 ரூபாய் பத்திரம், 50, 100 ரூபாய் பத்திரம் மற்றும் பாண்ட் கையெழுத்து வாங்கலாம். இதில் பாண்ட் யை விட பத்திரமே நமக்கு சாதகமாக அமையும். சாதரண பாண்ட் மூன்று வருடங்களுக்கு மேல் செல்லாது.

அந்த பத்திரத்தில் கடன் ரூபாய், வட்டி வீதம், திரும்பவும் பணம் செலுத்த கூடிய நாள் மாதம், கால அவகாசம் மற்றும் ஜாமீன் போன்றவைகள் எல்லாம் குறிப்பிட்டு எழுதலாம். இதனை பதிவு செய்ய செய்ய அவசியம் தேவைப்படாது. அதையும் மீறி பணம் தர முடியாது அல்லது கால தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு தான் வழக்கு சாதகமாக முடியும்.

நீதிமன்றமும் உங்கள் பக்கம் நியாயம் மற்றும் உரிய ஆதாரங்கள் இருந்தால் பணம் வந்து சேரும். இதற்காக கண்டிப்பாக கடன் கொடுத்தவர் ஆறு மாதங்களுக்கு மேல் அலைய நேரிடும் என்பதால் பொறுத்திருந்து செயல்பட்டால் நல்லது.

ஈட்டு கடன் பத்திரம்

கடன் பத்திரம் என்றால் என்ன

Eservices