கடன் பத்திரம் என்றால் என்ன - கடன் பத்திரம் என்பது கடன் பணம் கொடுப்பவர் கடன் வாங்குவோரிடம் ஒரு அத்தாட்சியாக பத்திரம் எழுதி இருவரும் கையொப்பம் இடுவதே கடன் பத்திரம் ஆகும். அதாவது கடன் வாங்குவோரிடம் ஆவணம் இல்லாத பட்சத்தில் பத்திரம் ஒன்றை எழுதி கொடுப்பது ஆகும்.
அது எதற்கு என்றால் கடன் கொடுப்பவர் ஏமாறாமல் இருக்க மற்றும் கடன் கொடுத்தவருக்கு ஒரு அத்தாட்சியாக இருக்கும். ஒருவேளை கடன் வாங்கிவர் நான் வாங்கவில்லை என்று கூறினால் அப்போது அந்த பத்திரம் வைத்து முறையிடலாம்.
அதற்கும் அவர் உங்களுடிமே நான் வாங்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் ஒரு கேஸ் ஒன்று போடலாம். முக்கியமாக நீங்கள் இரண்டு சாட்சிகள் வைத்து தான் பணம் கொடுக்க வேண்டும். மேலும் இதர விவரங்களை கடன் கொடுப்பவர் அந்த பத்திரத்தில் எழுதி அதனை அவரிடம் படித்து காட்டி கையெழுத்து அல்லது கை நாட்டு வாங்கி விடுங்கள்.
அந்த பத்திரத்தில் இருவரின் பெயர் முகவரி, வட்டி வீதம், பணத்தின் தொகை, காலவரை மற்றும் இரண்டு சாட்சிகளின் பெயர் மற்றும் முகவரி. இவை அனைத்தையும் நீங்கள் கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் அவரிடம் கையெழுத்து வாங்கும்போது Revenue ஸ்டாம்ப் மேலே கையெழுத்து இட சொல்லுங்கள். முடிந்தால் அவருக்கு ஒரு ஜாமீன் கையெழுத்து இட சொல்லுங்கள். ஜாமீன் வேறு சாட்சிகள் வேறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.