காணாமல் போன பத்திரம் - காணாமல் போன பத்திரத்தை நம்மால் மீட்ட முடியுமா. கண்டிப்பாக முயற்சி செய்தால் 100 சதவீதம் கிடைக்கும் என்பதே உண்மை. மேலும் இதற்காக நாம் நம்முடைய ஒட்டுமொத்த முயற்சியையும் எடுத்து ஆக வேண்டும்.
முதலில் நீங்கள் பொறுமையாக தேடி பாருங்கள். முடிந்த அளவில் நகல் எடுக்கும் போகும்போது தான் அதிகமாக பத்திரம் மற்றும் இதர ஆவணங்கள் தொலைந்து போகும். அப்படியும் தேடி கிடைக்கவில்லையென்றால் நீங்கள் உங்கள் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள். அந்த புகார் யை வாங்கி கொள்ளுங்கள்.
பிறகு செய்திதாளில் பத்திரம் தொலைந்து விட்டது என்று அதில் அப்டேட் செய்யுங்கள். மறுபடியும் நீங்கள் காவல் நிலையம் சென்று CSR நம்பர் வாங்கி கொள்ளுங்கள். ஒருவேளை அவர்களால் முடியவில்லையென்றால் Non Traceable Certificate என்று உங்களிடம் தருவார்கள்.
இறுதியாக நீங்கள் ஒரு பப்ளிக் நோட்டரி வக்கீலிடம் சென்று இந்த பிரச்சனைகள் மற்றும் அதன் விவரங்களைக் காண்பியுங்கள். அவர் உறுதி ஆணை ஒன்று உங்களிடம் தந்து விடுவார்.
சார் பதிவாளர் அலுவலகம் சென்று இந்த அனைத்து copy களையும் கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அதனை பரிசீலனை செய்வார்கள்.
நீங்கள் பத்திரம் மட்டும்மல்லாமல் எந்த ஒரு ஆவணங்களையும் மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முடிந்த அளவு நீங்கள் பத்திரத்தை ஒரு கலர் xerox போட்டு வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் மின் அஞ்சலுக்கு அதன் soft copy வைத்து கொள்ளுங்கள்.