கரி நாளில் செய்யக்கூடாதவை, கரி நாட்கள் 2025 ( kari naal 2025 ) - தினசரி காலண்டரில் ஆன்மீகம், பஞ்சாங்கம் மற்றும் ஜோதிடங்களை கணித்து நமக்கு பயன் தரும் வகையில் ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதனை தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் இந்த நாட்களை நமது நாட்காட்டியில் பார்த்தால் கரிநாள் மட்டுமே என்று எழுதி இருக்கும். ஆனால் அதன் பொருள் என்ன என்பதை பற்றி விவரித்திருக்காது.
கரிநாட்கள் என்றால் என்ன
கரி நாள் என்பது மற்ற கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் மற்றும் கரணம் மாதிரி இல்லாமல் இதற்கென்று ஒரு நியதி உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரிநாட்கள் வருகின்றன. இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இனி வரப்போகின்ற எல்லா வருடத்திலும் ஒரே மாதிரியான கரி நாட்கள் மட்டுமே காணப்படும். எப்போதும் இது மாறாது. இந்த நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மற்ற நாட்களை விட இரண்டு மடங்காக இருக்கும். இதனால் மனிதர்களுக்கு உடலில் சில பிரச்சனைகளும் மனதளவில் எண்ணங்கள் எதிர்மறையாகவும் இருக்கின்ற காரணத்தினால் கரி நாளில் எந்த வித நல்ல விஷயங்களை செய்யக்கூடாது என்று அறிவியலும் ஜோதிட சாஸ்த்திரமும் சொல்கிறது.
மேலும் படிக்க மீன ராசி ஏழரை சனி காலம் 2024
கரி நாள் வரக்கூடிய மாதங்களில் தேதிகள் 2023
1. சித்திரை ( 06, 15 )
2. வைகாசி ( 07, 16, 17 )
3. ஆனி ( 01, 06 )
4. ஆடி ( 02, 10, 20 )
5. ஆவணி ( 02, 09, 28 )
6. புரட்டாசி ( 16, 29 )
7. ஐப்பசி ( 06, 20 )
8. கார்த்திகை ( 01, 10, 17 )
9. மார்கழி ( 06, 09, 11 )
10. தை ( 01, 02, 03, 11, 17 )
11. மாசி ( 15, 16, 17 )
12. பங்குனி ( 06, 15, 19 ).
கேள்விகள்
1. கரி நாள் என்ன செய்யலாம் ?
பூஜைகள் செய்யவும், கடன் பிரச்சனை இருந்தால் அன்றைய தினம் சிறிதளவு கொடுத்தாலும் சீக்கிரம் அடையும்.
2. கரி நாளில் செய்யக்கூடாதவை ?
திருமணம், பிரயாணம் மேற்கொள்தல் கூடாது.
3. கரிநாள் அன்று தங்கம் வாங்கலாமா, நகை வாங்கலாமா ?
கூடாது.
4. கரி நாளில் மொட்டை போடலாமா ?
கூடாது.
5. கரி நாளில் வாகனம் வாங்கலாமா ?
கூடாது.
மேலும் படிக்க ராகு காலம் எமகண்டம் 2024