அரியலூர் மாவட்டம் ( Ariyalur District ) - இந்த அரியலூர் மாவட்டம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை படி உருவாக்கப்பட்டது. ஒரு மாவட்டத்தினை பொறுத்து தான் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பல உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7, 54, 894 ஆகும். இதன் பரப்பளவு மட்டும் 1940 சதுர கிலோ மீட்டராகும். அந்த வகையில் என்னென்ன உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது என கீழே காணலாம்.
வருவாய் கோட்டங்கள்
மொத்தமாக இரண்டு உள்ளது. அவைகள் அரியலூர் மற்றும் உடையார்பாளையம்.
வருவாய் வட்டங்கள் அல்லது தாலுகாக்கள்
மொத்தமாக நான்கு இருக்கிறது. அவைகள் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகும்.
நகராட்சிகள்
வரதராஜன்பேட்டை மற்றும் உடையார்பாளையம்.
சட்டமன்ற தொகுதிகள்
1. அரியலூர்
2. ஜெயங்கொண்டம்
3. குன்னம்.
இதையும் படிக்க: பட்டா சிட்டா
மக்களவை தொகுதி
1. சிதம்பரம்
இது தவிர ஊராட்சிகள் 201, பேரூராட்சிகள் 2, ஊராட்சி ஒன்றியங்கள் 6, உள்வட்டங்கள் 15 என உள்ளது. அரியலூர் மாவட்டத்தின் வாகன பதிவு எண் TN 61 ஆகும்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெயர்
திருமதி. ஆனி மேரி சுவர்ணா இந்திய ஆட்சி பணி.