கத்திரி வெயில் 2024 தொடங்கும் மற்றும் முடிவு தேதி 2024 ( kathiri veyil 2024 dates in tamil ) - கத்தரி அல்லது அக்னி வெயில் என்றும் இதனை கூறலாம். பொதுவாகவே பருவநிலை காரணமாக வெவ்வேறு வானிலை, காலநிலை மாற்றங்கள் வருடத்தில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் நடக்கும். அந்த வகையில் நமக்கு பொதுவாக தெரிந்தது எதுவென்றால் குளிர் மற்றும் வெயில் காலம் மட்டுமே. இதில் குளிர் மாதங்களாக டிசம்பர், ஜனவரி மற்றும் வெயில் மாதங்களாக ஏப்ரல், மே மாதங்கள் என கருதப்படுகிறது. மற்ற மாதங்களில் குளிர் மற்றும் வெயில் இருக்காதா என்று கேட்டால் ஆம் என்றே சொல்லலாம். மற்ற மாதங்களை காட்டிலும் இந்த மாதங்களில் வெயில் மற்றும் குளிர் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதில் வெயில் என்றாலே மே மாதம் என்று நாம் கண்ணை மூடி சொல்லலாம். ஏனெனில் அதிகளவில் கோடை விடுமுறை அளிப்பது இந்த நாட்களில் தான். அதனாலேயே மே மாதம் எல்லோர் மனதிலும் எளிதாக பதிவாகி விடுகிறது.
சற்று முன்: சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்
இதனை அறிவியல் பூர்வகமாகவும் நிருபித்து உள்ளார்கள் என்றால் அது ஆச்சர்யமே. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இவைகள் வீசுகின்ற இடைப்பட்ட காலமே இந்த கத்திரி வெயில் ஆகும்.
செய்ய வேண்டியவைகள்
1. வாடகை வீடு குடி போகுதல்.
2. கல்யாணம் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளையும் கல்யாணமும் நடத்தலாம்.
3. கட்டிடங்கள் எழுப்பலாம்.
குறிப்பு
மேற்கண்ட விஷயங்களை செய்யும் முன்னர் உங்கள் ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
சித்திரை கத்திரி 2024
சித்திரை மாதம் 21 முதல் வைகாசி மாதம் 15 ஆம் தேதி வரையும் இருக்கும். 25 நாட்கள் என மொத்தமாக இந்த வெயில் காணப்படும். இதனை முன் கத்திரி பின் கத்திரி என்பர்.
சற்று முன்: திருப்பதி நடைபாதை திறக்கும் நேரம்