கட்டிய வீடு அப்ரூவல் வாங்குவது எப்படி

கட்டிய வீடு அப்ரூவல் வாங்குவது எப்படி - தற்போதயை சூழ்நிலையில் ஒரு இடத்தை பதிவு செய்யவேண்டுமென்றால் நிச்சயம் அந்த இடத்திற்கு அப்ரூவல் இருக்க வேண்டும். அப்படி அப்ரூவல் இல்லாத நிலம், மனை மற்றும் வீட்டிற்கு பத்திரம் பதிவு செய்ய மாட்டார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் வீடுகளை அல்லது வணிக கடைகளை கட்டி கொள்கின்றனர். இதனால் அந்த இடத்திற்கு எப்போதும் பிரச்சனை தான் வந்து சேரும்.

கட்டிய வீடு அப்ரூவல் வாங்குவது எப்படி


ஒரு காலியான இடத்திற்கு நிச்சயம் அப்ரூவல் வாங்கி இருக்க வேண்டும். அந்த இடத்திற்கு அப்ரூவல் வாங்கிய பிறகு தான் வீடுகளை கட்ட வேண்டும். பிறகு பஞ்சாயத்தில் முறையாக அனுமதியும் பெற வேண்டும். இப்படி இத்தனை வழிமுறைகளை பின்பற்றி தான் வீடுகளை, கடைகளை கட்ட வேண்டும்.

இதையும் பார்க்க: தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதிகள் 1997 pdf

கட்டிய வீட்டிற்கு அப்ரூவல் மற்றும் அனுமதி பெறுவது கஷ்டமே. ஏனெனில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தான் வீடுகளை கட்ட வேண்டுமென்பதற்காக தான் இந்த அப்ரூவல் மற்றும் அனுமதி ஆகும். நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் பஞ்சாயத்தில் சரியான ஆவணங்கள், வரைபடம் மற்றும் அபராதம் இவைகளை கொடுத்து கேட்கலாம்.

இதையும் பார்க்க: Dtcp approval வாங்குவது எப்படி