கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உதவித்தொகை விண்ணப்பம் 2024 - கட்டுமானம் மற்றும் 19 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டு வருகின்றது. கடந்த தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 2023 இல் மூக்கு கண்ணாடிக்கு ரூபாய் 500 இருந்ததை 750 என உயர்த்தி இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற உதவித்தொகையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றது. விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் நல வாரிய அட்டை கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் முதலில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
அப்ளை செய்ய வழிமுறைகள்
1. முதலில் உங்கள் தொலைபேசி எண் மற்றும் அதற்கு வருகின்ற ஆறு இலக்க எண்ணை உள்ளிட வேண்டும்.
2. தனிப்பட்ட விவரங்கள், முகவரி, வேலை விவரங்கள், வங்கி விவரங்கள் மற்றும் மற்ற விவரங்கள் என அனைத்தையும் அப்டேட் செய்தல் அவசியம்.
3. மேலும் நீங்கள் எந்த துறையின் கீழ் அப்ளை செய்யப்போகிறீர்கள் என்று சரியாக சூஸ் செய்து கொள்தல் அவசியம். உதாரணமாக கட்டுமான தொழிலாளர், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மாற்றம் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் என தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: நலவாரியம் பயன்கள்
4. தொழிற்சங்கத்தின் தலைவரிடத்தில் கொடுக்கப்படும் பணி சான்றிதல்.
5. குடும்ப அட்டை
6. வாரிசு ஆவணம்
7. ஆதார் அட்டை
8. புகைப்படம்
இந்த வழிமுறைகளை பின்பற்றி புதிதாக அட்டையை பெற்று கொள்ளலாம். இதற்கு அதிகபட்சமாக 30 நாட்கள் ஆகும்.
இதையும் பார்க்க: நலவாரிய அட்டை பதிவு
உதவித்தொகை பெற
ஏற்கனவே அட்டை இருக்கிறது என்றால் கல்வி, திருமண உதவித்தொகைகளை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் Tnuwwb இணையத்தளத்திலயே கிடைக்கிறது. ஒருவேளை அப்ளை செய்ய முடியவில்லை எனில் இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்து உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.
இதையும் பார்க்க: ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்