கிராம கணக்கு எண் 3, 11, 13, 22, 24

கிராம கணக்கு எண் 3, 11, 13, 22, 24, 5, 6, 20, 2, 3, 14, 9, 7, 8 ( vao கிராம கணக்குகள் pdf download ) - VAO கிராம கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மொத்தமாக 24 விதமான பதிவேடுகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டுதல் கட்டாயம். இதனை இவருக்கு மேல் உள்ள அதிகாரி வருவாய் ஆய்வாளர் அவர்களும் மேற்பார்வை கொள்வார். அதற்குப்பிறகு மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அவர்கள் பார்வை இடுவார். எதற்காக இந்த பதிவேடுகள் என்றால் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்கள், பட்டா மாறுதல், வருவாய் வசூல் மற்றும் இதர காரணங்களுக்காக பதிவேடுகளை தயாரித்து வருவாய் கிராமங்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும். இதில் மிக முக்கியமான ஐந்து பதிவேடுகளை நாம் தெரிந்து கொள்தல் அவசியமான ஒன்று. அவற்றின் லிஸ்ட் பின்வருமாறு.

இதையும் பார்க்க: நில வரி ரசீது

கிராம கணக்கு எண் 3, 11, 13, 22, 24


கிராம கணக்கு எண்கள் Pdf

3 - பட்டா மாறுதல் ( நில உரிமையை விடுதல், நில ஒப்படை மற்றும் பட்டா மாறுதல் ).

11 - பட்டா படிவம் - பட்டாதாரர்களுக்கு பட்டா படிவம் வழங்குதல். தற்போது கணினி மயமான பின்னர் பட்டா நகல் ஆன்லைனிலே எடுத்து கொள்ளலாம்.

13 - ரோஜ் வரி ( தினசரி வரி ).

22 - கூட்டுப்பட்டா ( தற்போது நீக்கப்பட்டுள்ளது ).

24 - கிராம கணக்குகளின் கடைசி பதிவேடு 24 ஆம் கணக்கு ஆகும். இது கனிமங்கள் பற்றிய கணக்கு ( ஜனவரி முதல் டிசம்பர் வரை ) உள்ளது ஆகும்.

இதையும் பார்க்க: நத்தம் பட்டா அரசாணை

நீக்கப்பட்ட கிராம கணக்குகள்

ஒரு சில காரணங்கள் மற்றும் அரசு கணினிமயமாக்கப்பட்டதில் இருந்து கிராம கணக்கு எண்கள் நீக்கப்பட்டுள்ளது. அவற்றின் லிஸ்ட் பின்வருமாறு. 1, 1ஏ, 2டி, 2எப், 4, 8ஏ, 8பி, 10சி, 10டி, 10(1) மற்றும் 23. எப்படி பார்த்தாலும் பசலி ஆண்டில் இந்த கணக்குகள் எல்லாம் சப்மிட் செய்ய வேண்டும்.

தாசில்தார் பணிகள் என்றால் என்ன