கிரைய உடன்படிக்கை ஆவணம் என்றால் என்ன - இதனை ஆங்கிலத்தில் Sale Agreement என்று கூறலாம். இதற்கு ஒப்பந்தம் அல்லது அச்சாரம் என்றும் சொல்லலாம். இரு தரப்பினர்களும் போட்டு கொள்ளும் ஒப்பந்தமே இந்த கிரைய உடன்படிக்கை ஆவணமாகும்.
எடுத்துக்காட்டாக A என்னும் நபர் B என்னும் நபரிடம் இருந்து நிலத்தை வாங்க திட்டம் போட்டுள்ளார். A நபர் தற்போது தேவைப்படவில்லை ஆனால் சில காலங்களுக்கு பிறகு எனக்கு வேண்டும் என்று சொல்கிறார். B நபரும் அதனை ஒப்புக்கொள்கிறார். இருவரும் பேசி ஒரு கிரைய ஒப்பந்த மாதிரியை தயார் செய்து ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் போட்டு கொள்கின்றனர். முன்பணமும் B நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: Udr patta is valid or not
இப்போது A என்னும் நபர் முன் வராவிட்டாலும் அல்லது B என்னும் நபர் முன் வராவிட்டாலும் பிரச்சனை தான். இந்திய பதிவு சட்டம் பிரிவு 17 கட்டாயமாக கிரைய பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பதிவு செய்யவில்லை ஆனால் அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளதால் இருதரப்பில் யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் இந்திய பதிவு சட்டம் பிரிவு 49 யை பயன்படுத்தி வழக்கு தொடுக்கலாம்.
இதையும் பார்க்க: Patta maruthal status