கிசான் கார்டு வாங்குவது எப்படி

கிசான் கார்டு  வாங்குவது எப்படி - கிசான் கார்டு என்பது மத்திய அரசால் வழங்கப்படுகின்ற ஒரு வகையான திட்டம் ஆகும். இதனை சிறு குறு மற்றும் பெரு விவசாயிகள் பயன் பெறலாம். ஒருவேளை விவசாயிகளுக்கான வேலைகள் அல்லது அந்த தொழிலில் ஈடுபடாமல் இருந்தால் இந்த திட்டம் பலனளிக்காது. விவசாயிகள் நிலத்தினை பராமரிக்கவும், சாகுபடி செய்யவும் மற்றும் இதர விவசாயி சம்மந்தப்பட்ட வேலைகளையும் செய்ய இந்த திட்டம் உபயோகமாகிறது.

கிசான் கார்டு  வாங்குவது எப்படி


அப்டேட் மே 18, 2022

கிசான் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி மத்திய அரசு மே 16 ம் தேதி வெளியிட்டது. அது என்னவென்றால் 11 வது தவணை மே 26 ம் சிறு குறு விவசாயிகளுக்கு அவர்கள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிசான் கார்டுகளால் விவசாயிகள் மட்டுமல்லாது கால்நடை பயன்படுத்துவோரும் பயன்பெற முடியும். மொத்தமாக கறவை மாடு வைத்திருப்பவர்கள், ஆடு வைத்திருப்பவர்கள், மீன் தொழில் செய்பவர்கள் மற்றும் பால் பண்ணை வைத்திருப்பவர்கள் இந்த கார்டினை பெற்று கொள்ளலாம். முதலில் வங்கி கணக்கு ஏ டி எம் யை போலவே இந்த கார்ட்லயும் பணத்தை எடுத்து கொள்ளலாம். எடுத்த பணத்தை ஒரு மாதத்திற்குள்ளேயே கட்டி விட்டால் வட்டி ஏதும் இல்லை. அப்படி ஒரு மாதங்களுக்கு மேல் சென்றால் 33 பைசா வட்டியும் வருடத்திற்கு 83 பைசாவும் கட்ட நேரிடும்.

கிசான் கார்டு பெறுவது எப்படி 

உங்களுக்கு எந்த வங்கி கணக்கு இருக்கிறதோ அவர்களிடமோ அல்லது அவர்கள் வங்கியின் இணையத்தளத்திலோ இந்த கிசான் விண்ணப்பம் இருக்கும். அதனை சரியான முறையில் பூர்த்தி செய்து உங்கள் வங்கிகளில் சென்று கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் எந்த வித கட்டணமும் வசூல் செய்ய மாட்டார்கள்.

மேலும் ஆவணங்களாக உங்கள் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் நகல், நில ஆவணங்கள், ஆதார் மற்றும் அவர்கள் கேட்கும் இதர ஆவணங்கள் அனைத்தும் இந்து கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தவுடன் அலுவலகர் அதனை பார்வையிட்டு உங்களுக்கு கிசான் கார்டு கொடுக்க ஏற்பாடு செய்வார்கள். இந்த கிசான் கார்டு பயன்படுத்தி நீங்கள் ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வங்கிகள் உங்களுக்கு கடனாக கொடுக்கும்.

அவ்வாறு கொடுத்த கடனை சரியாக காட்டினாலே உங்களுக்கு 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக வட்டிகள் குறைக்கப்பட்டு உங்கள் வங்கி கணக்கு எண்ணிற்கு எவ்வளவு வட்டிகளில் குறைக்கப்பட்ட பணமோ அந்த பணம் நேரிடையாக சென்று விடும். ஏற்கனவே வேறு ஒரு உழவர் மற்றும் விவசாயிகள் விவசாய கடன் தொகை வாங்கியிருந்தாலும் இந்த கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறு குறு விவசாயி மானியம் 6000

உழவர் அட்டை பெறுவது எப்படி

PM Kisan