கிசான் கடன் அட்டை பெற தேவையான ஆவணங்கள்

கிசான் கடன் அட்டை பெற தேவையான ஆவணங்கள் - கிசான் அட்டை பொறுத்தவரையில் இது விவசாயிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் ஒரு நற்திட்டம் என்றே சொல்லலாம். ஏனெனில் விவசாயிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பல நலத்திட்டங்கள் என செய்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிசான் திட்டம் தற்போது வரை நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கிசான் கடன் அட்டை பெற தேவையான ஆவணங்கள்


முதலில் கிசான் அட்டை பெற்றவர்கள் 1, 60, 000 வரையும் கடனாக வாங்கி கொள்ளலாம். அதனை முடித்து விட்டால் 3, 00, 000 வரையும் வாங்கி கொள்ளலாம். ரூபாய் 1, 60, 000 க்கு எந்த வித அடமானமும் தேவையில்லை. ஆனால் ரூபாய் 3, 00, 000 கடன் பெற நிச்சயம் ஆவணத்தை நகலாக வைக்க வேண்டும்.  என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதனை கீழே காணலாம்.

1. பான் கார்டு

2. ஆதார் கார்டு

3. நில ஆவண நகல் ( பட்டா மற்றும் பத்திரம் )

4. Kcc விண்ணப்பம் படிவம்

5. வங்கி முதல் பக்க நகல்

6. புகைப்படம்.

இதையும் பார்க்க: கிசான் கார்டு வாங்குவது எப்படி