கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி 2024 - பட்டா என்பது ஒருவரின் நில உரிமை ஆவணமாக கருதப்படுகிறது. இதில் தனி, கூட்டு என இருவகை பட்டாக்கள் உள்ளன. தனி பட்டா என்றால் ஒரே நபர் ஒரு நிலத்தின் உரிமையாளராக உள்ளார் என்பதை காட்டும். கூட்டு பட்டா என்றால் இரண்டிற்கும் மேற்பட்ட எத்தனை நபர்கள் இருந்தாலும் அத்தனை பேரும் கூட்டு உரிமையாளராக கருதப்படுவர்.

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி


கூட்டு பட்டாவை தனிபட்ட நபர் தனியாக ஒரு பட்டா வாங்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் பாகப்பிரிவினை செய்திருக்க வேண்டும். அந்த பாகப்பிரிவினை பத்திரம் செய்ய பழைய பத்திரத்தின் நகல், கூட்டு பட்டா, இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் கொண்டு பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.

இதையும் காண்க: உயில் எழுதுவது எப்படி

பத்திரத்தை பதிவு செய்தவுடன் வட்ட அலுவலகத்தில் சர்வேரிடம் பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் கூட்டு பட்டாவை கொடுத்து கருவூலத்தில் அதற்கான தொகையினை செலுத்தினால் 30 நாட்களுக்குள் நிலம் அளக்க சர்வேயர் வந்து விடுவார். அவர் உங்களுக்குண்டான இடத்தினை ஆய்வு செய்து அதற்கொரு நில வரைபடம் தயாரித்து அதற்கொரு உட்பிரிவு எண் வழங்குவார்.

இதையும் காண்க: பூர்வீக சொத்து பட்டா மாற்றம்

பிறகு நீங்கள் இ சேவை மையம் அல்லது நேரடியாகவும் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தனி பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் அனைத்தும் verify செய்த பின்னர் தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார். தாசில்தார் அவர்கள் அதனை சரிபார்த்த பின்னர் உங்களுக்கு பட்டா வழங்குவார்.

குறிப்பு

மற்ற உரிமையாளர்களுக்கு கிராம அலுவலர் அவர்கள் ஒப்புதல் கடிதம் ஒன்றை அனுப்புவார். அவர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதையும் காண்க: கூட்டு உயில்