கூட்டுறவு துறை அமைச்சர் பெயர் 2024 ( kooturavu thurai amaichar name in tamil ) - கூட்டுறவு என்பது கூட்டாக மக்களும் அரசாங்கமும் சேர்ந்து இணையும் ஒரு துறையாகும். இந்த துறையானது மிகவும் ஏழையாக உள்ள மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் போன்றோர்கள் சிறப்பாக அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாக கொண்டிருப்பதாகும். கூட்டுறவு துறையானது உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறையோடு கலந்திருந்தாலும் இரண்டும் வெவ்வேறு தான். இரண்டிற்குமே தனித்தனியாக அமைச்சர்கள் உள்ளனர்.
இது 1904 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டாலும் 1912 ஆம் வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது அப்போது தான் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் 34 மாநில கூட்டுறவு வங்கிகள், 351 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 96, 000 க்கும் மேலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் எட்டு லட்சத்திற்கும் மேலான கூட்டுறவு சங்கங்கள் என உள்ளது. இதற்காக பல்வேறு பிரிவுகள் அதற்கென பல்வேறு அதிகாரிகள் இந்த துறையில் செயல்படுகிறார்கள்.
உள்துறை அமைச்சர் பெயர் தமிழ்நாடு 2024
அதிகாரிகள்
1. மாநில பதிவாளர்கள்
2. இணை பதிவாளர்
3. துணை பதிவாளர்
4. சார் பதிவாளர்
5. முதுநிலை ஆய்வாளர்
6. இளநிலை ஆய்வாளர்.
பணிகள்
இதில் முக்கியமானதே விவசாயிகளுக்கு கடன் வழங்குதல், விவசாய விளைப்பொருட்களை விற்பனை செய்தல், இடுபொருள், நியாமான விலையை நிர்ணயித்தல் போன்றவைகள் ஆகும். மேலும் இதில் உறுப்பினர்கள் ஆவதற்கு 110 ரூபாய் இருந்தால் போதுமானது. வங்கி மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், மகளீர் சுயயுதவி குழு கடன்கள் மற்றும் இதர கடன்கள் அவ்வப்போது தள்ளுபடி ஆகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக ஏப்ரல் 29, 2022 அன்று விவசாய பயிர்க்கடன் 12, 110 கோடி கடன்களை கிட்டத்தட்ட 16 லட்சம் விவசாயிகளுக்கு பலன் அளித்தது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆயோக் என்றால் என்ன
தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சர் யார் 2024
தற்போதைய தமிழ்நாட்டின் கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு. திரு. பெரியகருப்பன் அவர்கள். இவர் ஏற்கனவே அறநிலைத்துறை அமைச்சராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார். மத்திய அரசாங்கத்தில் மாண்புமிகு திரு. அமித்ஷா அவர்கள் உள்ளார். இவர் ஏற்கனவே உள்துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிதி அமைச்சர் பெயர் 2024