கோவில் நிலம் பட்டா ஆக்கிரமிப்பு 2024 - கோவில் நிலம் என்பது அரசாங்கமும் அல்லது தனிப்பட்ட நபரும் அதாவது டிரஸ்ட் மூலமாகவும் உள்ள சொத்துக்கள் ஆகும். மற்ற நிலங்களுக்கும் இந்த நிலங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் விதிகள் மிகவும் அதிகமாகும். பொதுவாகவே அரசாங்கம் சார்ந்த கோவில் நிலங்களை வாங்குவதென்பது மிகவும் சிரமமாகும். ஒரு தனிப்பட்ட மனை அரசாங்கம் சேராத நிலங்களை யாராவது வாங்கினால் எளிதாக எந்த வித விதிகளும் இல்லாமல் வாங்கலாம் அல்லது கிரையம் செய்து விடலாம். ஆனால் கோவில் சார்ந்த நிலங்களை வாங்கும்போது விதிகளையும் நீதிமன்ற ஒப்புதல்களையும் வாங்கினால் மட்டுமே வாங்கியவருக்கு எந்த வித நட்டம் பிரச்சனைகள் ஏற்படாது.
கோவில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டாக்கள் கிடையாது என்றும் அவ்வப்போது வருவாய்த்துறையினர் மக்களிடம் கூறி வருகின்றார்கள். இதில் ஆட்சேபனை இல்லாத நிலங்களை மனை வரன்முறை படுத்தி அந்த நிலங்களுக்கு பட்டாக்களை வழங்கலாம் என்று தமிழக அரசு 2020 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றில் தெளிவுபடுத்தியது. ஆனால் கோவில்களை பராமரிப்பதற்கு வீடுகளை அரசாங்கமே கொடுத்துருக்கும் வேலையில் அதனை விற்க அவர்களுக்கே உரிமை இல்லை என்றும் அவர்களின் வருங்கால சந்ததியினர் வாழ்ந்து கொள்ள முடியும் என்று கோவில் அறநிலைத்துறை கூறியுள்ளது.
பட்டா சிட்டா
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
மேலும் கோவில் நிலங்களை கையகப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்தவர்களும் சரி அல்லது ஆக்கிரமிப்பு செய்பவர்களும் சரி அவர்களுக்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்க படும் என்றும் அறநிலைத்துறை அமைச்சர் கூறி உள்ளார். முன்னர் எல்லாம் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. அதனால் குற்றங்கள் குறையாமல் அதே நிலைமையில் உள்ளமையால் அதனை குற்றவியல் வழக்காக மாற்றினால் ஜாமீனில் கூட வெளிவர முடியாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.
பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை