குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று - குடும்ப அட்டைகளில் இந்த நீக்கல் சான்று என்பதெல்லாம் கிடையாது. மாறாக அதனை நாம் நீக்கம் செய்தாலே 15 லிருந்து 30 நாட்களுக்குள் அந்த பெயர் நீக்கம் செய்யப்படும். இதற்காக நீங்கள் எங்கும் விண்ணப்பமும் அல்லது விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. ஒருவேளை அதிலே அந்த நபர் பெயர் இருந்தால் பின்னாளில் அட்டை வைத்திருக்கும் நபருக்கு தான் பிரச்சனையே.
இதற்காக நீங்கள் மிகவும் கஷ்டப்பட தேவையில்லை. அதனை மிகவும் எளிமையான முகவரியில் பெயரை நீக்கலாம். இதற்காக முக்கியமான ஆவணங்களான திருமண சான்றிதழ், தத்தெடுப்பு செர்டிபிகேட் மற்றும் இதர ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அதில் அப்லோட் செய்ய வேண்டும்.
ஆனால் ஆவணங்களை அப்லோட் செய்வது கடைசி படி தான். அதற்கு முன்னர் Tnpds வெப்சைட் யை லாகின் செய்து இடது பக்கத்தில் navigation இல் அட்டை பிறழ்வுகள் என்ற option யை தெரிவு செய்தால் அட்டை தொடர்பான சேவைகள் என்கிற பேஜ் ஓபன் ஆகும். அதில் குடும்ப தலைவர், நியாய விலை கடை இருக்கும் இடம் மற்றும் இதர டீடெயில்ஸ் இருக்கும்.
பிறகு சேவையை தேர்வு செய்யவும் என்கிற பொத்தானை சூஸ் செய்தால் உறுப்பினர் சேர்க்க, முகவரி மாற்றம், சிலிண்டர் எண்ணிக்கை மாற்றம், அட்டை ரத்து செய்ய, அட்டை வகை மாற்றம், குடும்ப அட்டை முடக்கம், குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர் நீக்கல் போன்றவைகளை நாம் காணலாம். இதில் ககுடும்ப அட்டை நீக்கலை தெரிவு செய்து ஆவணங்களை அப்லோட் செய்தால் குறிப்பு எண் வந்து விடும்.
அந்த குறிப்பு எண்ணை முகப்பு பேஜ்க்கு சென்று கட்டத்தில் இடவும். அப்போது நீங்கள் கொடுத்த விண்ணப்ப நிலையை பச்சை நிறத்தில் காட்டும். முழுவதுமாக பச்சை நிறத்தில் காட்டியவுடன் விண்ணப்பம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.