குடும்ப அட்டை status ( Kudumba attai status ), நகல், பதிவிறக்கம் download - இதனையும் ஒரு முகவரி ஆவணமாக எடுத்து கொள்ளலாம். பெரும்பாலும் குடும்ப தலைவர் இந்த ஸ்மார்ட் கார்டினை முகவரி ஆவணமாகவும் அடையாள ஆவணமாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏதாவது பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய கார்டு அப்ளை செய்தல் போன்ற status தெரிந்துகொள்ள நாம் மண்டல அலுவலகம் செல்ல தேவையில்லை.
அரசாங்க வெப்சைட் Tnpds இல் சென்று உங்கள் விண்ணப்ப நிலையினை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு பதிவு செய்யப்பட்ட போன் நம்பர் இல்லாமலேயே நம்மால் பார்க்க முடியும்.
எந்த வித திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்தாலும் உங்களுக்கு குறிப்பு எண் ஒன்றை வழங்குவார்கள். அதன் எண்ணை ஒரு குறிப்பிட்ட நாட்களில் Tnpds வெப்சைட் இல் சென்று செக் செய்தால் விண்ணப்ப நிலையினை அறிந்து கொள்ள முடியும். ஆனால் நகல், கோப்பு பதிவிறக்கம் வேண்டுமென்றால் நிச்சயம் லாகின் செய்தால் தான் முடியும்.
இதையும் பார்க்க: குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்கை