பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி 2024

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி 2024 ( பதிவு செய்யாத ) - பிறந்த குழந்தைக்கு உடனடியாக சான்றிதழை வாங்கலாம். ஒரே ஒரு வாரத்திற்குள் பிறந்த சான்றிதழை வாங்கலாம். நாம் இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் சேவை இல்லை. நேரடியாக அரசு மருத்துவமனையில் எந்த வித கட்டணமும் இல்லாமல் இந்த சான்றிதழை பெறலாம். இரண்டிற்கு மேல் பிறந்த சான்றிதழ் வேண்டுமென்றால் ஒன்றுக்கு தலா 200 வசூலிக்க படும்.

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி


அரசு மருத்துவமனையில் எப்படி குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வாங்குவது ? 

1. முதலில் தாய்மார்கள் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

2. ஒருவேளை பதிவு செய்யாமல் இருந்தால் சான்றிதழ் பெற வாய்ப்பில்லை.

3. மேலும் தாய் சேய் அட்டையில் மாத மாதம் குழந்தை மற்றும் தாய் நலன் கருதி அப்டேட் செய்து இருக்க வேண்டும்.

4. அவ்வாறு செய்யாமலும் அல்லது மருத்துவமனைக்கு செல்லாமலும் இருந்தால் சான்றிதழ் பெற சிரமமாகும்.

5. குழந்தையின் தந்தை மற்றும் தாய் இருவரின் முகவரி சரியாய் இருக்கும் ஏதாவது ஒரு Proof எடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆதார் கார்டு

6. இறுதியில் குழந்தை அரசு மருத்துமனையில் பிறந்த உடன் சான்றிதழ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

7. அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் உங்கள் குழந்தையின் சான்றிதழை தருவார்கள்.

8. அவர்கள் கொடுக்கும் சான்றிதழில் பெயர் குழந்தையின் பெயர் மட்டும் இருக்காது. மற்றபடி தாயின் மற்றும் தந்தையின் விவரங்கள் அனைத்தும் அப்டேட் செய்ய பட வேண்டும்.

9. பிறகு அதிகாரி ஒரு Form ஒன்றை தருவார். அதனை வாங்கி கொண்டு Fill Up செய்தால் இரண்டு நாட்களில் உங்கள் குழந்தையின் Birth Certificate ரெடி.

10. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழை பின்னாளில் ஆன்லைனில் நாம் பார்த்து கொள்ள முடியும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் ஏற்றிவிடுவார்கள்.

பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள் 

இதற்காக ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல்கள், டிஸ்சார்ஜ் லெட்டர், தாய் சேய் அட்டை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அட்டை இருந்தால் போதுமானது.

முத்துலட்சுமி ரெட்டி திட்டம்

மகப்பேறு உதவித்தொகை

Birth Certificate