மதுரை சித்திரை திருவிழா 2025 அட்டவணை தேதி ( Madurai chithirai thiruvila 2025 schedule) - மதுரையில் மிகவும் பிரபலமானது இந்த சித்திரை திருவிழா ஆகும். மதுரை சித்திரை விழா என்றாலே நமக்கு ஞாபகம் வருவது திருக்கல்யாணம் மட்டுமே. ஆனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் சித்திரை திருவிழாவில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் கள்ளழகர் அவர்கள் மதுரைக்கு அப்பால் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளார். அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மதுரையில் வைகையில் இறங்கி விட்டு மறுபடியும் அவர் இடத்திற்கே சென்று விடுவார்.
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் மற்றும் அருள்மிகு அம்பாள் இவர்கள் இதே கோவிலில் இருப்பார்கள். கொடியேற்றம் முடிந்த பிறகு தினசரி மாசி வீதிகளில் வீதியுலா வருவார்கள். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவினை காண மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கே அணிவகுப்பர்.
இந்த வருடம் அதாவது ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 05 ஆம் தேதி வரையும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் முக்கியமான திருவிழா நாளினை மட்டுமே கீழே உள்ள பத்தியில் கொடுத்துள்ளோம்.
சற்று முன்னர்: சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்
மதுரை சித்திரை திருவிழா 2025 தேதிகள்
1. ஏப்ரல் 12 - கொடியேற்றம்.
2. ஏப்ரல் 19 - பட்டாபிஷேகம்.
3. ஏப்ரல் 20 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திக்விஜயம்.
4. ஏப்ரல் 21 - திருத்கல்யாணம்.
5. ஏப்ரல் 22 - திருத்தேரோட்டம்.
6. ஏப்ரல் 22 - அழகர் எதிர்சேவை.
7. ஏப்ரல் 23 - அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார்.
குறிப்பு
கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் காலை 05 மணி முதல் மதியம் 12.30 வரையும் மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரையுள்ள நேரங்களில் தரிசிக்கலாம். மற்ற 12.30 முதல் 04 மணி வரையுள்ள நேரங்களில் நடை மூடப்பட்டிருக்கும்.
சற்று முன்: சனி பிரதோஷம் 2025 தேதிகள்