மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025 நேரம் ( madurai meenakshi thirukalyanam 2025 date ) - மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெறும். கணக்கில் அடங்கா கூட்டம் இங்கு ஆண்டுதோறும் இருக்கும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு விசேஷங்கள் மிகவும் பிரபலமானவை.
உதாரணமாக சொன்னால் தை என்றால் தைப்பூசம், மாசி என்றால் மாசி மகம் மற்றும் பங்குனி என்றால் பங்குனி உத்திரம் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி விசேஷங்கள் ஆங்காகே நடைபெற்றாலும் குறிப்பிட்ட கோவில்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் தான் இந்த சித்திரை மாதம் வரக்கூடிய மீனாட்சி திருக்கல்யாணமாகும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: மதுரை சித்திரை திருவிழா 2025 அட்டவணை
ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வரையும் இங்கு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாளன்று நடைபெறுகின்றது. இந்நன்னாளில் பெண்கள் தாலி கயிற்றை மாற்றிக்கொள்ளலாம்.
மீனாட்சி திருக்கல்யாணம் 2025 நேரம் மற்றும் தேதி
ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் 08.59 க்குள் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.