மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் pdf

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் pdf online download apply online மற்றும் படிவம் பூர்த்தி செய்வது எப்படி நிபந்தனைகள் என்கிற விளக்கத்தினை நமது PattaChitta.Co.in இணையத்தளத்தில் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது மக்களுக்கு வழங்கி வருகின்றது. அந்த வகையில் மாதந்தோறும் ரூபாய் 1000 ஒவ்வொரு குடும்ப தலைவருக்கும் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் pdf


தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவர்களுக்கு மாத மாதம் ரூபாய் 1000 வழங்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இதற்கு சில பல நிபந்தனைகள் இருக்க வேண்டும். உதாரணமாக முதியோர் உதவித்தொகை ஏற்கனவே வாங்கியிருக்கவும் மற்றும் நடைமுறையில் வாங்கவும் கூடாது அல்லது 2.5 லட்சம் வருமானம் பெற்றவர்களாக இருக்க கூடாது அல்லது கனரக வாகனங்கள் இருக்க கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்ட உரிமை தொகை விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த விவரங்களும் அந்த படிவத்திலேயே அப்டேட் செய்திருப்பார்கள்.

இதையும் பார்க்க: குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் மாதம் விண்ணப்பம்

இந்த விண்ணப்பங்கள் தற்போது நேரடியாக வீட்டிற்கு வந்து சேருகின்றது. மேலும் டோக்கன் எண் ஒன்றும் வழங்கப்படும். முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டமென ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையும் டோக்கன்கள் வழங்கப்படும்.

இதையும் பார்க்க: புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி