மைத்ர முகூர்த்தம் 2025 என்றால் என்ன ( maitreya muhurtham April 2023 ) - ஒரு நாளைக்கு நிறைய நிறைய முஹுர்த்தங்கள் இருப்பதை நாம் அறிந்த ஒன்று தான். இதில் பொதுவாக மக்களுக்கு சுப முகூர்த்தம் மட்டுமே தெரியும். ஆனால் ஒரே நாளில் ஏகப்பட்ட முஹுர்த்தங்கள் இருப்பதை ஒரு சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவ்வகையான முகூர்த்தம் நாளுக்கு நாள் வருவதில்லை. மாறாக மேஷ அல்லது விருச்சிக லக்கினம், அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் மற்றும் மேஷ ராசிகள் இவைகள் வந்தால் அந்த நாளானது மைத்ர முகூர்த்தம் எனலாம்.
இவைகள் முழு நாளாக இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரம் மட்டுமே. மாதத்தில் இரண்டு அல்லது மூன்று மைத்ரா முகூர்த்தங்கள் வருகின்றன. நாம் இந்த நேரங்களை பயன்படுத்தி தீராத கடன் சுமைகளை தீர்க்க முடியும். எப்படி கரி நாள், செவ்வாய் ஓரை இருக்கிறதோ அதேபோன்று தான் இதுவும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு
இன்றைய மைத்ர முகூர்த்த நேரம் 2025 மே மாதம்
மே மாதம் 07 ஆம் நாள் திங்கள் கிழமை நாளில் இரவு 06.54 முதல் 08.21 மற்றும் மே மாதம் 18 ஆம் நாள் வியாழக்கிழமை அதிகாலை 03.49 முதல் 05.36 வரையும் இருக்கின்றன.