மனையடி சாஸ்திரம் அடி கணக்கு 2025 அளவுகள் PDF Download - மனையடி என்றால் வீட்டின் அளவுகளை ( நீளம் அகலம்) குறிக்கும். பொதுவாக நாம் வீடு கட்டினால் அனைவரும் வாஸ்து சாஸ்திர படி கட்டுவதில்லை. நாம் அதனை பார்த்து வீடு கட்டினால் மிகுந்த நன்மை பயக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. முதலில் ஆறு அடியில் இருந்து 100 அடிக்கு மேல் வரையுமே இருப்பதை நாம் அறிந்த ஒன்று தான்.
வாஸ்து அளவுகள்
நாம் வீடுகள் கட்டும்போது சதுரமாக இருத்தல் கூடாது. சற்று அளவுகள் கொஞ்சம் மாறி இருக்க வேண்டும். கோவில்களுக்கு தான் சதுர அடியில் கட்டுவார்கள். இதில் கூறப்படும் அளவுகள் அனைத்தும் நன்மையே பயக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு அளவுகளும் ஒவ்வொரு பொருளை அல்லது அர்த்தங்களை நமக்கு சொல்கிறது. உதாரணமாக 06 அடியில் வீடு கட்டினால் நமக்கு இறைவன் நன்மை கிடைக்கும் என்று சொல்வார்கள். இதே 07 அடியில் வீடு கட்டினால் கடன் பிரச்சனை வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இதனால் நாம் ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து தான் கட்ட நேரிடும். ஒருவேளை அனைத்து பக்கங்களும் நிகரான 07 அடியில் இருக்கிறது என்றால் அதனை 07.04 அல்லது 07.05 அடிக்குள் கட்டினால் அது நன்மை தரும் அடி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதேபோன்று மற்ற அளவுகளில் அதிகம் அல்லது குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் அளவினை மாற்றி கொள்ளலாம். எது எப்படியோ நன்மை பயக்கும் அடி கணக்குகளை சரியாக பார்த்து வீடு கட்டி கொள்ளுங்கள்.
புதிய தொழில் தொடங்க நல்ல நாள் 2025