மாதாந்திர சேமிப்பு திட்டம்

மாதாந்திர சேமிப்பு திட்டம் - மக்கள் தன் அன்றாட வாழ்வில் பணத்தை சேமித்து வைப்பது தற்போது அரிதான ஒன்றாகி விட்டது. நடைமுறையில் விலைவாசிகள் கூடினாலும் சேமிப்பு என்பது குறைந்துவிட்டது. ஆனால் சேமித்த வைத்த பணமானது பிற்காலத்தில் நிறையவே உபயோகமாகும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் 10 சதவீத மக்கள் தன்னுடைய சம்பளத்தை பிடித்தம் செய்து அதனை சேமித்து வைக்கின்றனர். தபால் நிலையத்தில் மிகவும் பிரபலமான திட்டங்களில் மாத சேமிப்பு திட்டமும் ஒன்றாகும். 01. 10.2022 இன் நிலவரப்படி,  6.7% வட்டி விகிதம் இதற்கு கொடுக்கப்படுகிறது.

மாதாந்திர சேமிப்பு திட்டம்


அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்

1. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து கணக்கினை தொடங்கலாம்.

2. கணக்கு தொடங்குவதற்கு 1000 ரூபாய் கட்ட நேரிடும்.

3. ஒரு நபர் அதிகபட்சமாக 4, 50, 000 லட்சம் ரூபாயும் இரண்டு நபர்கள் ஒரே கணக்கில் இருந்தால் 9, 00, 000 லட்சம் ரூபாயும் முதலீடு செய்யலாம்.

4. ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

5. மூன்று வருடங்களுக்குள் முதலீடு செய்த பணத்தினை கேட்டால் 2 சதவீத பணம் நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து கழிக்கப்படும்.

6. மாத மாதம் உங்கள் சேமிப்பு கணக்கிற்கு வட்டி பணம் வந்து விடும்.

7. இறுதியாக நீங்கள் கட்டிய முதலீடு தொகை வட்டி பணம் வருகின்ற சேமிப்பு கணக்கிற்கே வந்து சேரும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்

முதலீடு தொகை மற்றும் அதன் வட்டி விகிதம் ( 5 வருடங்களுக்கு )

1. 50, 000     - 66, 500 ( 275 மாதம் வட்டி )

2. 1, 00, 000 - 1, 33, 000 ( 550 மாதம் வட்டி )

3. 1, 50, 000 - 1, 99, 500 ( 825 மாதம் வட்டி )

குறிப்பு

முதல் வரிசையில் உள்ள 50, 000 தொகைக்கு மாத மாதம் ரூபாய் 275 சேமிப்பு கணக்குக்கு வந்து கொண்டே போகும். இதனை நீங்கள் மாதம் எடுத்துக்கொண்டாலும் சரி அல்லது எடுக்காவிட்டாலும் சரி அந்த தொகையானது உங்கள் அக்கௌன்ட்ற்கு வந்து கொண்டே இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2022