மத்திய நில அளவை அலுவலகம் சென்னை தமிழ்நாடு ( Central survey office chennai ) - ஒவ்வொரு பதிவேடுகளும் சரி அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. அந்த வகையில் பழைய செட்டில்மென்ட் ரெகார்ட்ஸ், யூ டி ஆர், ஆர். எஸ். ஆர் மற்றும் பழைய பட்டா சம்பந்தப்பட்டவை அனைத்தும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேமிக்கப்படும். அதேபோல பழைய அ பதிவேடு, அடங்கல், சிட்டா தொகுப்பு, வரைபடம் போன்றவைகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் சேமிக்கப்படும். இதேபோல மற்ற பதிவேடுகளும் ஒவ்வொரு வருவாய்த்துறை அலுவலகத்தில் சேமிக்கப்படும்.
நகர நில அளவை, மூல ஆவணங்கள், வரைபடம் போன்றவைகள் மத்திய நில அலுவலகத்தில் சேமிக்கப்படுகின்றன. மக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதனை அரசாங்கம் கொடுப்பார்கள். நில அளவுகளில் பிரச்சனை, வரைபடம் மாற்றம் போன்றவைகள் தேவைப்படும் பட்சத்தில் பொது தகவல் அலுவலர் மூலம் எடுத்து கொள்ளலாம். சரியான விளக்கம் இல்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அடிப்படையில் தகவல்களை அறியலாம். அப்படி இல்லையென்றால் நேரில் சென்று தகவல்களை பெறலாம்.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா புலப்படம் download
முகவரி
மத்திய நில அளவை அலுவலகம்,
PWD எஸ்டேட் சேப்பாக்கம், ட்ரிபிள்கேன்,
சென்னை தமிழ்நாடு 600 005.
குறிப்பு
அலுவலக நேரம் - காலை 10 மணி முதல் மாலை 05.45 வரை.
இதையும் பார்க்க: Slr ஆவணம் என்றால் என்ன