மயங்கொலிச் சொற்கள் Pdf download - மயங்கொலி சொற்கள் என்பது நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளின் உச்சரிப்புகள் அதாவது ஒலி ஒரே மாதிரி இருந்தாலும் வேறு அர்த்தங்கள் கொண்டவையாக உள்ள எழுத்துக்களை மயங்கொலிச் சொற்கள் எனலாம். வேறு வேறு அர்த்தங்கள் கொண்ட ஏதோ ஒரு வார்த்தை இருப்பின் ஆனால் நாம் பேசும் போது அந்த இரண்டு வார்த்தைகளையும் உச்சரிப்பு பிழையால் பேசுவது இந்த மயங்கொலி சொற்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு 1
மயங்கொலி சொற்கள் ஒரே தொடரில் அமைத்து எழுதுக கனை கணை
மேலே உள்ள கனை மற்றும் கணை வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஒரே மாதிரி ஒலிக்கும். ஆனால் பொருள் வேறு. அதனை வாக்கியமாக பேசும்போது புரிந்து கொள்ள முடியும்.
க கா கி கீ வரிசை சொற்கள்
கனை - கனைத்தல்
கணை - அம்பு
குதிரை கனைக்கும் போது ஒருவர் அவ்வழியே வந்து அதனை பார்த்து கணை எய்தான் ( அம்பிட்டான் ).
வலி வளி வழி
வலி - காயத்தால் ஏற்படும் வலி
வளி - காற்று
வழி - பாதை
ஒருவன் பாதையில் தடுமாறி விழுந்ததில் கீழே விழுந்தான். அப்போது அவனுக்கு மிக்க காயம் ஏற்பட்டு வலி ஏற்பட்டது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கும்போது பலத்த வளி வீசியது.
இடையின எழுத்துக்கள்
விலை விளை விழை
விலை - மதிப்பு
விளை - விளைச்சல்
விழை - விருப்பம்
விலைமதிப்பற்ற பயிர் விளைச்சலாக இருந்தாலும் விழை இருந்தால் செய்ய முடியும்.
இது போன்ற மயங்கொலி வார்த்தைகளை வாக்கியத்தில் எழுதலாம். எட்டு வகையாக இதனை பிரித்து கொள்ளலாம். ண, ன, ந, ல, ள, ழ, ர, ற போன்ற எழுத்துக்கள் ஆகும். இதனை நாம் ணகரம், னகரம், நகரம், லகரம், ளகரம், ழகரம், ரகரம், றகரம் என்றும் அழைக்கலாம். இது போன்ற வார்த்தைகள் ஏகப்பட்டதாக தமிழில் இருக்கிறது. அவற்றில் ஒரு சில சொற்கள் பின்வருமாறு.
1. கலை, களை, கழை
2. தலை, தளை, தழை
3. பொரி, பொறி
4. மரம், மறம்
5. உலை, உளை, உழை
6. அலை, அளை, அழை
7. கிலி, கிளி
8. ஆனை, ஆணை
9. என்றால், என்றாள்
10. இவன், இவண்
11. அரை, அறை.