மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 2024 - மேட்டூர் அணையால் கிட்டத்தட்ட பன்னிரெண்டிருக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பலனடைகின்றன. தமிழகத்தின் சிறப்புமிக்க அணையாக மேட்டூர் அணை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அணை 1934 அன்று திறக்கப்பட்டது. ஆனால் அடிக்கல்லோ 1925 அன்றே நாட்டியது. அணை திறக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேலே ஆகிவிட்டது. இதற்கு மற்றுமொரு பெயரும் உள்ளது அது என்னவென்றால் ஸ்டான்லி அணை. பெரும்பாலான மக்கள் இன்றும் இதனை ஸ்டான்லி என்றும் தான் அழைப்பர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் மற்றும் இதன் உயரம் 120 அடி வரையும் இருக்கும்.
வருடத்திற்கு ஒருமுறை இந்த அணை ஜூன் 12 ம் தேதி திறக்கப்படுகிறது. ஏனென்றால் விவசாயிகளின் நீர் பாசன வசதிக்காகவும் குடிநீர்க்காகவும் மற்றும் இதர தேவைகளுக்காகவும் திறந்து விடப்படுகிறது.
அப்டேட் மே 21, 2022
ஒரே நாளில் மூன்று மடங்கு உயர்ந்து 115 அடியாக தற்போது இருக்கிறது. கன அடியில் 47, 436 லிருந்து 46, 353 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தூர்வாறும் பணி விரைவில் முடிக்கப்பட்டால் அணையில் சீரான நீர் வரத்து இருக்கும்.
அப்டேட் மார்ச் 24, 2022
மார்ச் 24 நிலவரப்படி நீர்மட்டம் 104 அடியாக இருக்கிறது. இந்த மாதங்களில் படிப்படியாக நீர்மட்டங்கள் குறைந்து கொண்டே வருகிறது. மார்ச் 08 ம் தேதி அன்று 106 அடியாக இருந்த நீர் மட்டம் தற்போது 104 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக மேட்டூர் அணை 120 அடி வரையும் நீரை சேமித்து வைக்கலாம். ஆனால் இந்த மாதத்தில் 1500 கன அடி நீர் தேவைக்காக திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர்மட்டம் ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.