மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி சிறப்பு முகாம்கள் ஆங்காங்கே கொண்டுவந்தார்கள். கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன. அதில் மின் இணைப்பு பெயர் மாற்ற முடியாதவர்கள் அல்லது மாற்ற கூடியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்


ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 24 தேதி வரையும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில் 2, 68, 000 க்கும் மேலாக பெயர் மாற்றம் நடந்தது. இதனால் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சி கொண்டனர். நிறைய மக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதால் மின்சார வாரியம் மேலும் ஒரு மாதத்திற்கு இதனை நீட்டியுள்ளது.

இதையும் பார்க்க: EB உடன் இணைக்கப்பட்டுள்ள ஆதாரை எவ்வாறு சரிபார்க்கலாம்?

25.08.2023 முதல் 25.09.2023 வரை மின் இணைப்பு பெயர் மாற்ற தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள். ஒரே நாளில் மின் இணைப்பின் பெயரை இந்த முகாமில் மாற்றி கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூபாய் 726 செலுத்த வேண்டும். நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைனில் வழியாகவும் பணம் செலுத்தி பெயரை மாற்றி கொள்ளலாம். இதற்கு ஆவணங்களாக பட்டா, சிட்டா, பத்திரம் மற்றும் சமீபத்திய வீட்டு வரி அல்லது சொத்து வரி முதலியவைகள் எடுத்து வர வேண்டும்.

இதையும் பார்க்க: பெயர் மாற்றம் படிவம்