மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் கடிதம்

மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் கடிதம் - மின்சார பகிர்மான கழகத்தில் மின் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மக்களுக்காக செய்து தருகின்றார்கள். இதில் பூந்தோட்டம், தோட்டக்கலை, வணிகம், தொழிற்சாலை மற்றும் வீடு என பல்வேறு தரப்பட்ட மின்சார வகைகளை இந்த மின்சார துறையானது செய்து வருகின்றது.

மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் கடிதம்


தற்போது இதனை எளிமையாக்க ஒரு திட்டத்தை சமீபத்தில் கொண்டுவந்தது. மக்கள் இனிமேல் புதிதாக அப்ளை செய்ய வேண்டுமென்றால் அலுவலகம் வர தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் அப்ளை செய்த முதல் 30 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அதனை செயல்படுத்துவார்கள். அது எந்த வகையானாலும் சரி.

மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

முன்பெல்லாம் கடிதம் அல்லது மனு ஒன்றினை எழுதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மக்கள் கொடுப்பார்கள். அது இனிமேல் தேவையில்லை என்றே சொல்லலாம்.

மாதிரி கடிதம்

விடுநர்

மனுதாரர் பெயர் மற்றும் விலாசம்.

பெறுநர்

உயர்திரு மின் பொறியாளர் அவர்கள்,

முகவரி.

பொருள்: மின் இணைப்பு வேண்டி மனு அல்லது கடிதம்.

மதிப்பிற்குரிய ஐயா,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனது இடத்திற்கு பட்டா, பத்திரம், வீட்டு வரி ரசீது என அனைத்து ஆவணங்களும் உள்ளன. எனக்கு மின் இணைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு

1. ஆதார்

2. புகைப்படம்

3. வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி ரசீது

4. பட்டா

5. பத்திரம்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு