மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்

மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம் - மின்னணு அட்டையை ஆங்கிலத்தில் ஸ்மார்ட் கார்டு மற்றும் ரேஷன் கார்டு என்றும் சொல்லலாம். இந்த ரேஷன் அட்டை வைத்து அரசாங்கம் தரும் தரமான மானியம் மிகுந்த சமையல் பொருட்களையும் மற்றும் அவ்வப்போது அரசாங்கம் தரும் உதவித்தொகையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த மானியங்கள் மற்றும் உதவி தொகை எல்லாம் அனைவருக்குமே கிடைக்காது. ஏனென்றால் ரேஷன் அட்டை வகைகளை பொறுத்தே மானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்


அது மட்டுமில்லாமல் இன்னும் கொஞ்ச நாளில் அரசாங்கம் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த உரிமை தொகைகள் வர தாமதமாகிறது. ஆதார் எண்ணையும் கட்டாயம் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்த எண்ணை வைத்து கொண்டே பின்னாளில் எங்கும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

எதற்காக இந்த அட்டை கோப்பு வேண்டுமென்றால் தேவைப்படும் போதும்,  தொலைந்தால் அல்லது நகல் போன்ற காரணங்களுக்காக எடுக்க நேரிடும். இந்த நகலை காண்பித்தும் நாம் ரேஷன் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த மின்னணு கோப்பை மிகவும் எளிதாக டவுன்லோட் செய்யலாம். பயனாளர்கள் வழக்கம் போல் Tnpds.Gov.In இணையத்தளம் சென்று மொபைல் எண்ணை உள்ளீட்டு செல்லவும். அப்படி சென்ற உடன் இடது பக்கத்தில் என் விவரம் செலக்ட் செய்தால் கீழ்கண்ட விவரங்கள் காணப்படும்.

1. குடும்ப அட்டை எண்

2. மின்னணு கார்டு எண்

3. அட்டை பதிவு எண்

4. குடும்ப அட்டை வகை 

5. பெரியோர்களின் எண்ணிக்கை 

6. சிறியோர்களின் எண்ணிக்கை 

7. சிலிண்டர் எண்ணிக்கை 

8. பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்

9. இணைக்கப்பட்ட ஆதார் அட்டைகள்

10. நியாய விலை குறியீடு எண்

11. முகவரி 

12. அட்டை நிலை செயலில் 

13. மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்

இந்த 13 விவரங்கள் அனைத்தும் என் விவரம் சூஸ் செய்தவுடன் வரும். இதில் 13 வது விவரத்தை செலக்ட் செய்தால் பதிவிறக்கம் ஆகி விடும். இந்த நகல் முழு பேப்பர் வடிவத்தில் இருக்கும். அதாவது ஆதார் அட்டையை போன்று மொத்த விவரங்கள் அடங்கிய ஒரு நகலாக இருக்கும்.

ரேஷன் கார்டு செய்திகள் 2023

புதிய குடும்ப அட்டை ஆன்லைனில் பெறலாம்

புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி