மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி - ஆதார் என்பது தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து தரை மக்களின் ஒரு தேவையாக அமைகிறது. இதனை கட்டாயம் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது போல் இல்லை. ஆனால் ஆதார் இல்லாமல் ஒரே ஒரு விஷயங்கள் கூட செய்ய முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். இப்போது உள்ள காலகட்டத்தில் எங்கும் எதிலும் இந்த அட்டை பயன் அளிக்கிறது. உதாரணமாக சொன்னால் ஒரு பான் கார்டு அப்ளை செய்ய, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க, பதிவு துறையில் நமது நிலத்தை பதிவு செய்ய அல்லது கிரையம் செய்ய என பல்வேறு இடங்களில் இது அவசியமாகிறது.
அப்படி இருக்கும் நேரத்தில் இந்த கார்டு எவ்வளவு முக்கியம் என்று மக்களுக்கு கண்டிப்பாக தெரியும். ஆனால் மக்கள் செய்யும் தவறே என்னவென்றால் இந்த கார்டு வழியாக கொடுக்கும் தொலைபேசி எண் மாற்றாமல் இருப்பது அல்லது தொலைந்த விட்ட எண் இவைகள் போல் இருந்தால் நீங்கள் ஆதார் அட்டை வைத்திருப்பதே உபயோகமற்றது எனலாம்.
தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல்
எந்த ஒரு புதிய விண்ணப்பித்திருக்கும் ஆதார் உள்ள தொலைபேசி எண் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உங்களை வெரிபைவ் செய்வதற்கு ஆறு இலக்க எண்கள் கட்டாயமாக வேண்டும். ஆனால் உங்கள் எண் தொலைந்தோ அல்லது மாற்றம் செய்யாமல் இருந்தால் நீங்கள் அப்ளை செய்திருந்த எந்த விண்ணப்பத்தின் நிலையும் நிலுவையில் இருக்கும். அதனால் முதலில் ஆதாருடன் உங்கள் எண்ணை இணைத்து விடுங்கள்.
புதிய பென்ஷன் திட்டம் 2022
ஆதார் அட்டை போன் நம்பர் மாற்றுவது எப்படி
1. நேரில் சென்று தான் மாற்ற முடியும்.
2. ஏனென்றால் அந்த வசதி இன்னும் ஆன்லைனில் வரவில்லை. ( பெயர், முகவரி, பிறந்த தேதி மட்டுமே மாற்ற முடியும். அதற்கும் ஆவணங்கள் கட்டாயம்.
3. இதற்கு கட்டணம் 50 ரூபாய் வசூலாகும்.
4. முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் அட்டைக்காக கொடுக்கப்பட்ட எண் மாறி விடும்.