மோடி வீடு திட்டம் 2024 ( modi veedu thittam 2024 ), தொகுப்பு வீடு திட்டம் 2024 , மோடி வீடு அளவு - இந்த திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதனை இரண்டு வழிகளில் நாம் அழைக்கலாம் 1. PMAY 2. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏகப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த தேதியில் மாற்றம் இருக்கிறதா என்று பின்னாளில் தெரிந்து விடும்.
மொத்தமாக நான்கு விதமாக மத்திய அரசு வழிவகுக்கிறது. அதன் அடிப்படையில் தான் மோடி வீடு திட்டத்தினை அமல்படுத்துகின்றனர். இதற்காக தேவைப்படும் ஆவணங்களாக ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, வருமான சான்றிதழ், பேங்க் புக், ஸ்மார்ட் கார்டு மற்றும் போட்டோ கருதப்படுகிறது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு இலவச வீடு வழங்கும் திட்டம் தான் செயல்படுத்தப்படும். தனி தனி ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் கீழ் இருந்தால் அவர்கள் அப்ளை செய்யலாம். மேலும் ஒரு வீட்டில் யார் குடும்ப தலைவராகவோ இருக்கிறாரோ அவர்கள் தான் அப்ளை செய்யணும். ஒருவேளை குடும்ப தலைவர் இல்லையென்றால் குடும்ப தலைவி பெயரில் தான் இந்த திட்டம் செயல்படும்.
நீங்கள் வீடு கட்டும்போது மூன்று விதமாக பில் போட்டு தருவார்கள். அதாவது மூன்று தவணைகளில் பணம் கொடுப்பார்கள். மொத்தமாக 2, 67, 000 வரையும் இலவச மானியம் கொடுக்கப்படும். அரசு கொடுக்கும் 2, 67, 000 வைத்து தான் வீடு கட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து உங்கள் வீட்டை கட்டிக்கொள்ளலாம்.