மூல பத்திரம் என்றால் என்ன

மூல பத்திரம் என்றால் என்ன - மூல பத்திரம் என்பது முதன்மை பத்திரம் எனப்படும். அதாவது ஒரு இடத்திற்கு முதன் முதலாக பத்திரமாக பதிவு செய்வது மூல பத்திரம் எனலாம். இதனை தாய் பத்திரம் என்று வேறு பொருளும் உள்ளது. ஒரு இடத்தின் மொத்த பரப்பளவு இப்பொழுது நில வரைபடத்தில் காட்டும். மூல பத்திரம் தான் அதற்கு முன்னோடி.

மூல பத்திரம் என்றால் என்ன


உதாரணமாக ஒருவரிடம் நீங்கள் இடம் வாங்கிறீர்கள் என்றால் அவரிடம் அந்த சொத்தானது எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும். பிறகு அதில் ஏதாவது வில்லங்கம் போட்ருக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும். நிறைய வழிகளில் சொத்தானது அவரிடம் வந்துருக்கும். அவைகள் பின்வருமாறு,

1. தான பத்திரம்

2. தான செட்டில்மெண்ட்

3. உயில்

4. கிரையம்

5. பாகப்பிரிவினை

இந்த வழிகளில் அவர் பெற்றுருப்பார். இந்த வழிகளிலும் அவர் பெற்றாலும் அதற்கு முன் இன்னொருவரிடம் அவர் மேலே குறிப்பிட்டுள்ள எதோ ஒரு பத்திரத்தில் வாங்கி இருப்பார். இப்படியே இது அடுக்கி கொண்டே இருக்கும். இறுதியில் முதன் முதலாக விற்ற பத்திரம் தான் மூல பத்திரம் ஆகும்.

இதன் நகலை நாம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் எண்ணை வைத்து ஒவ்வொரு நபர் வாங்கிய மூல பத்திரத்தை கண்டுபிடிக்க இயலும். 

Fb பேஜ்