மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் - விடுகதைகள் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே விடுகதை மீது ஆர்வம் தானாகவே வந்து விடும். விடை தெரியவில்லை என்றாலும் சற்று மூளையை தட்டி யோசித்து கொண்டே இருப்போம். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்ப்ப இருப்பது நமது மூளையை குழப்புகின்ற விடுகதைகள் பத்து காண்போம்.

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்


விடுகதைகள்

1. காற்று வீசும் அது அழகான மரம்.

2. முடியும் இல்லாத முகத்தில் இல்லாத தாடி.

3. பிறை போல இருக்கும் அண்ணன் பயிர் பச்சை அறுத்திடுவான்.

4. நீண்ட உடம்புக்காரன் நெடுந்தூரப் பயணக்காரன்.

5. உலக முழுவதும் பறந்து செல்வேன், ஆனால் ஒரு மூலையை விட்டு நகர மாட்டேன்.

6. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது.

7. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல்.

8. திங்க பழம் காய்க்கும், திங்காத காய் காய்க்கும்.

9. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?

10. இவன் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான்.

விடைகள்

சாமரம், காத்தாடி, அரிவாள், ரயில், ஸ்டாம்ப், விமானம், கிளி, வேப்ப மரம், இதயம், பணம்.

இதையும் வாசிக்க: தமிழ் நகைச்சுவை விடுகதைகள்