திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூர் முதலில் வேலூர் மாவட்டத்தில் தான் ஒரு நகரமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் நாளன்று வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இது 35 வது மாவட்டமாகும். தற்போதைய திருப்பத்தூரின் மாவட்ட கலெக்டராக இருப்பவர் திரு. அமர் அவர்கள் உள்ளார்.இதன் வாகன பதிவு எண் TN 83 ஆகும்.
கோட்டங்கள்
1. திருப்பத்தூர்
2. வாணியம்பாடி
வட்டங்கள்
1. ஆம்பூர்
2. வாணியம்பாடி
3. திருப்பத்தூர்
4. நாட்றம்பள்ளி.
நகராட்சிகள்
1. திருப்பத்தூர்
2. வாணியம்பாடி
3. ஆம்பூர்
4. ஜோலார்பேட்டை.
பேரூராட்சிகள்
1. உதயேந்திரம்
2. ஆலங்காயம்
3. நாட்றம்பள்ளி.
ஊராட்சி ஒன்றியங்கள்
1. திருப்பத்தூர்
2. ஆலங்காயம்
3. ஜோலார்பேட்டை
4. நாட்றம்பள்ளி
5. கந்திலி
6. மாதனூர்.
இது தவிர சட்டமன்ற தொகுதிகள் நான்கு, மக்களவை தொகுதி இரண்டு, 208 ஊராட்சிகள் மற்றும் 195 வருவாய் கிராமங்கள் செயல்பாட்டில் உள்ளன.
Home - PattaChitta.Co.in.