முதல் திருமண சான்றிதழ் கோரும் விண்ணப்பம் Pdf

முதல் திருமண சான்றிதழ் கோரும் விண்ணப்பம் Pdf பெறுவது எப்படி ( muthal thirumana certificate pdf ) - முதல் திருமண சான்று கிராம நிர்வாக அலுவலர் pdf அவர்கள் மூலமாக கிடைக்கும். திருமணம் ஆன அனைவரும் இந்த சான்றிதழை பெற வேண்டும். ஏனென்றால் உங்கள் திருமணம் பதிவு செய்ய இந்த சான்று தேவைப்படுகிறது.


அதுமட்டுமில்லாமல் திருமணமான பெண்ணிற்கு ஆதார், வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ஸ்மார்ட் கார்டு போன்றவைகளில் முகவரி கண்டிப்பாக மாற்றி ஆக வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் தான் மாற்ற முடியும் என்று கட்டாயமில்லை. இந்த சான்று இருந்தால் உங்கள் வேலை சுலபமாக இருக்கும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் ஆன்லைனில் அப்ளை செய்யும் வசதி இல்லாத நிலையில் நேரில் சென்று தான் விண்ணப்பிக்க முடியும். திருமணம் ஆன பெண் வீட்டாரோ அல்லது மணமகன் வீட்டாரோ யாரோ ஒருவர் சான்றிதழை வாங்க முடியும். 

நேரில் சென்றால் படிவத்தை கொடுப்பார்கள். அதனை பூர்த்தி செய்து விட்டு உரிய ஆவணங்களாக ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, Transfer செர்டிபிகேட் மற்றும் அவர்கள் கேட்கும் ஆவணங்கள் எல்லாம் சமர்ப்பித்தால் ஒரு வாரத்திற்குள் வந்து சேரும். ஒரு சில நேரத்தில் தாலுகா அலுவலகம் சென்று மனு எழுதி ஒப்புதல் பெற்று தான் VAO இடம் செல்ல வேண்டும்.

Application முதல் திருமண சான்றிதல் படிவம் Pdf

இந்த சான்று இருந்தால் திருமண நபர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் தமிழக அரசாங்கம்வழங்குகிறது. உதாரணமாக மூவலூர் திருமண உதவித்தொகை போன்றவைகளையெல்லாம் கிடைக்கும்.


மேலே உள்ள படிவம் மணமகனுக்கு உள்ளது. மண மகன் உள்ள இடத்தில் மணமகள் என்று மாற்றி கொள்ள வேண்டும்.

Tn.Gov.in

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள்

மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி