முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு ( muthalamaichar manu or cm manu status format in tamil ) - இன்றைய சூழலின் காரணமாக மக்கள் தொகை அதிகமாக உள்ள நேரத்தில் அதிகமாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. தனிப்பட்ட முறையிலும் சரி பொது விஷயத்திலும் சரி பிரச்சனைகள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை சரிசெய்ய மக்கள் மனு மூலம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ சென்று புகார் மனுக்களை கொடுப்பார்கள். ஆனால் அவைகள் எல்லாம் பரிசீலினை செய்யப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்றே கூறலாம். அதற்காக எல்லாம் மனுவும் ரிஜெக்ட் அல்லது ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறே இதற்கு முற்று புள்ளியாக அமைகிறது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு Pdf
அப்படி என்ன தான் இதற்கு வழி என்று பார்த்தால் முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் நம்முடைய தனிப்பட்ட மற்றும் பொது விஷயத்துக்காகவே மனுக்களை கொடுக்கலாம். இதில் நீங்கள் கொடுக்கப்படும் மனுக்கள் நேரடியாக முதலமைச்சர் கண் பார்வைக்கு செல்லும் காரணத்தால் அதிக அளவில் மக்கள் புகார் கடிதங்களை Cmcell க்கு அனுப்பி வைக்கின்றனர். இதற்காக கட்டணங்கள் ஏதும் கிடையாது. வருடத்திற்கு ஒருவர் சுமார் ஐம்பது மனுக்களை கொடுக்கலாம். நீங்கள் அனுப்பிய மனுக்கள் 100 நாட்களுக்குள் பரிசீலினை செய்யப்பட்டு அதற்குண்டான செய்தியையும் அதிலே குறிப்பிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எழுதப்படும் மனு அல்லது புகார் ஒருவர் பெயரில் மட்டுமே ரெஜிஸ்டர் செய்து கொள்ள முடியும். அதாவது பொது விஷயமாக இருந்தாலும் அதில் ஒருவரே லாகின் செய்து பிரச்சனைகளை சொல்லலாம்.
மனு எழுதுவது எப்படி
முதலமைச்சர் மனு எழுதுவது எப்படி
இதற்காக வெள்ளை பேப்பரில் எழுத வேண்டிய கட்டாயமில்லை. முதலில் ரெஜிஸ்டர் செய்த பின்னர் லாகின் செய்து உங்கள் புகார்களை டைப் செய்தாலே போதுமானது. ஒவ்வொரு புகார்களை நீங்கள் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் ரெபெரென்ஸ் எண் கொடுப்பார்கள். அதனை குறித்து கொள்வதன் மூலம் உங்கள் மனுவின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.
மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி