முத்திரை தீர்வை - முத்திரை தீர்வை ஒரு நில அல்லது வீடு மற்றும் இதர பத்திரத்தின் சொத்து மதிப்பின் கட்டணமாக செலுத்துவது ஆகும். இதனை நாம் எழுதும் பத்திரத்தை பொறுத்து கட்டணமாக செலுத்த வேண்டும். நீதி சாரா முத்திரை தாள் என்றும் கூட நாம் சொல்லலாம். இதில் எந்தெந்த ஆவணங்களுக்கு என்னென்ன தீர்வை கட்டணம் என்று பார்ப்போம்.
1. விடுதலை பத்திரம் - 1 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள், 7 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்கள்
2. தான செட்டில்மெண்ட் - விடுதலை பத்திரம் போன்றே இதற்கும் முத்திரை தாள் வாங்க வேண்டும். (குடும்ப நபர்களுக்கும் மற்றும் குடும்ப இல்லாத நபர்களுக்கும்)
3. பாக பிரிவினை பத்திரம் - குடும்ப நபருக்கு 1 சதவீதம் (ஒவ்வொரு பாத்திரத்திற்கும்), மூன்றாம் நபருக்கு 4 சதவீதம்
4. ரத்து ஆவணம் - ரூபாய் 50
5. விக்கிரைய பத்திரம் - ரூபாய் 20
6. விற்பனை பத்திரம் - 7 சதவீதம்
7. ஈடு அடமானம் - 1 சதவீதம்
குறிப்பு
இங்கே குறிப்பிட்டுள்ள சதவீதம் என்பது சொத்து மதிப்பை பொறுத்து முத்திரை தீர்வை வாங்க வேண்டும். இந்த முத்திரைத்தீர்வை வாங்கி விட்டு பதிவு கட்டணங்களையும் கட்ட வேண்டும். பதிவு கட்டணம் சொத்தின் மதிப்பை பொறுத்ததே ஆகும்.