அப்டேட் மார்ச் 20, 2023
கூடுதலாக 2023 முதல் 1 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். மொத்தமாக 35 லட்சம் பயனாளிகள் இதனால் பயனடைவார்கள்.
முதியோர் உதவித்தொகை படிவம் Pdf அல்லது தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை படிவம் Pdf
இந்த படிவம் ஆன்லைனிலில் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் இ சேவை மையம் சென்று விண்ணப்பித்தால் மிகவும் வசதியாக இருக்கும். முதியோர் தொகை மாதத்திற்கு 1000 ரூபாய் வழங்கிறது தமிழ்நாடு அரசு. 60 வயது வரம்பு மேல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த தொகை வழங்குகிறது நமது தமிழ்நாடு அரசு.
இதையும் பார்க்க: முதியோர் உதவித்தொகை நிறுத்தம்
முதியோர் உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
முதலில் இதற்கு தேவைப்படும் ஆவணங்களை எடுத்து வைக்கவும். அப்படி என்னென்ன ஆவணங்களை OAP அப்ளை செய்வதற்கு வேண்டுமென்றால் புகைப்படம், ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வங்கி புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் அல்லது பான் கார்டு. இதற்கு முன்னர் கேன் நம்பர் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். மொத்தமாக கட்டணம் ரூபாய் 60 வசூல் செய்வார்கள். இதனை தாசில்தார் செக் செய்த பின்னர் உங்கள் விண்ணப்ப நிலை சரியாகி விடும். இதனை தெரிந்து கொள்ள நீங்கள் ஏற்கனவே அப்ளை செய்த மையத்தில் சென்று விசாரிக்கவும். நேரிடையாக வங்கி மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.