முதியோர் உதவித்தொகை நிறுத்தம் 2024

முதியோர் உதவித்தொகை நிறுத்தம் கேட்டு மனு அரசாணை - 60 வயது நிரம்பிய நிபந்தனைகளுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாத மாதம் ரூபாய் 1000 மத்திய மற்றும் மாநில அரசாங்கமானது வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 34 லட்சத்திற்கும் மேலாக முதியோர்கள் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்


2022 ஆம் ஆண்டு 1, 80, 000 க்கும் மேலாக சில பல முதியோர்களுக்கு அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. ஏனெனில் இதில் சில குளறுபடிகள், சந்தேகங்கள், இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள், நில பரிவர்த்தனை, வங்கி கணக்கில் அதிக இருப்பு வைத்திருப்பவர்கள் என பல்வேறு காரணங்களால் திடீரென்று நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: பிறப்பு சான்றிதழ் முகவரி திருத்தம்

புதிய ஆர்டர் காப்பி வந்தவர்களுக்கு வரவில்லை என்றால்

புதிதாக ஆர்டர் காப்பி வந்தவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் வந்துசேரும். அப்படி வராதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றினை எழுதினால் போதுமானது. அந்த மனுவில் விண்ணப்ப எண், செயல்முறை ஆணை எண் மற்றும் மின் கையொப்ப தேதி இவைகள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

இதையும் பார்க்க: 2000 உதவித்தொகை பெற விண்ணப்பம்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை

ஏற்கனவே உதவித்தொகை வாங்கியவர்களுக்கு சமீபகாலமாக வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துறையில் கேட்கலாம். சரியானதாக கருதப்பட்டால் உங்கள் விண்ணப்பம் பரிசீலினை செய்யப்பட்டு உதவித்தொகை மறுபடியும் பெறலாம்.

இதையும் பார்க்க: ரேஷன் கார்டு 1000 ரூபாய் தமிழ்நாடு தகுதி