டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் புகார் - இந்த வகையான திட்டம் மகப்பேறு திட்டம் என்பர். நாம் நம் இணையத்தளத்தில் மகப்பேறு திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்து உள்ளோம். மேலும் அதில் எவ்வாறு பெறுவது என்கிற பதில்களும் அடங்கும். இதை முதன் முதலில் 1989 இல் தான் கொண்டு வந்தனர். அப்போது மொத்தமாக 250 ருபாய் தமிழக அரசு வழங்கியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 2018 இல் 18000 ரூபாய் ஆக உயர்ந்தது. இறுதியாக 2022 ஆம் ஆண்டு அதனை ரூபாய் 24, 000 ஆக தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.
இத்தகைய திட்டம் எதற்கு என்றால் மக்கள் கஷ்ட படக்கூடாது என்பதற்காகவும், மக்கள் சத்தான உணவுகளை அவர்கள் கர்ப காலத்தில் சாப்பிட வேண்டும் என்பதற்காக தான்.
இது முழுக்க முழுக்க அனைவருக்கும் பொருந்தும். இது அவர்கள் தான் வாங்க வேண்டும் இவர்கள் தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. அணைத்து தாய்மார்களும் வாங்கலாம்.
இந்த தொகையை அரசு ஒரு முறையாக வழங்காது. 12 வாரத்தில் மேல் தான் கிடைக்கும். அல்லது மாத வாரியில் தான் கிடைக்கும். பிரித்து பிரித்து கொடுப்பார்கள். மேலும் பாதி தொகையை குழந்தை பிறப்பதற்கு முன்னும் மீதி தொகையை குழந்தை பிறந்த பின்னும் தருவார்கள். மொத்தமாக 5 தவணைகளில் கொடுத்து விடுவார்கள். ஒருவேளை உங்களுக்கு குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்ட பின்னர் தான் பணத்தை வழங்குவார்கள்.
நாம் இதனை நம் உள்ளுரிலே அப்ளை செய்யலாம். அதற்க்காக நாம் எங்கும் அலையை தேவையில்லை. அவ்வாறு அப்ளை செய்ய நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை ஏதும் இல்லை.
இது முழுக்க முழுக்க ஏழை பெண்களின் நலனுக்காக மட்டும் தான் அரசாங்கம் இத்தகைய திட்டத்தை வழங்கி வருகிறது.
ஊட்டச்சத்துக்கள்
1. பேரிச்சம் பழம்
2. பிஸ்கட்
3. நெய்
4. பூச்சி மாத்திரை
5. டானிக்
மேலும் இந்த ஊட்டச்சத்துக்களை அனைவர்க்கும் வந்து சேர்வதில்லை. அதனை நீங்கள் அளிக்க எங்கள் மகப்பேறு உதவித்தொகை போஸ்ட் யை பாருங்கள். அதில் நாங்கள் அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம்.