நகர நில அளவைப் பதிவேடு

நகர நில அளவைப் பதிவேடு - கிராமம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு தனித்தனியே நில அளவை செய்யப்பட்டு அதனை பதிவேடுகளாக நில அளவை பதிவேடுகள் துறை ஆனது பாதுகாத்து வருகிறது. கிராம புறங்களில் உள்ள நிலங்கள் பட்டா மற்றும் சிட்டா எனவும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களை Tslr என்றும் அழைக்கலாம். இதில் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்கள் ஒரு சிலர் Slr என்று நினைத்து கொள்கிறார்கள். Slr என்பது பழைய நில பட்டா ஆவணமாகும். அதனை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பராமரித்து வருகின்றனர்.

நகர நில அளவைப் பதிவேடு


Eservices என்கிற வெப்சைட்டில் நகர நில அளவை பதிவேடு என்கிற எட்டாவது option ஆக உள்ள ( நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட என்பதனை தேர்ந்தெடுக்கவும். பிறகு மாவட்டம், வட்டம், நகரம், வார்டு மற்றும் பிளாக் ஆகியவை கேட்கும். அதனை சரியாக உள்ளீட்ட பின்னர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் கட்டாயமாக கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் உங்கள் நிலத்திற்கான tslr நகல் தோன்றும்.

இதையும் பார்க்க: பட்டா சிட்டா

பட்டாவிற்கும் இந்த Tslr விற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதில் நிலத்தின் உரிமையாளர் பெயர் எல்லாம் அடங்கல் என்கிற option இல் காட்டும். மேலும் அது புறம்போக்கு, சர்க்கார், ரயத்துவாரி, ஜில்லா நிலமா என mention செய்து விடுவார்கள். மேலும் வரைபடத்தையும் எடுத்து கொள்ளும் வசதி தற்போது உள்ளது.

இதையும் பார்க்க: பட்டா சிட்டா எடுத்தல்