நலவாரிய அட்டை பதிவு online ( nalavariyam )

நலவாரிய அட்டை பதிவு online status எண் மோடி புதுப்பித்தல் டவுன்லோட் ( nalavariyam status renewal ) - தினக்கூலிகள், வாரக்கூலிகள் என இருக்கின்ற தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். இது மத்திய மற்றும் மாநில அரசு சேர்ந்து நடத்துகிறது. இந்த துறையின் கீழ் பதினெட்டு விதமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சேர்ந்து கொள்ளலாம். வீட்டு வேலை செய்யும் மக்கள் முதல் மூட்டை தூக்கும் மக்கள் வரையுள்ள அனைத்து ஆட்களும் இதில் சேரலாம்.

அமைப்பு சார்ந்த துறைகளில் உள்ள மக்கள் இதில் சேர முடியாது. உதாரணமாக மாத சம்பளம், பி எப், இ எஸ் ஐ மற்றும் ஓய்வூதியம் வாங்கும் நபர்களுக்கு இந்த திட்டம் பயன்படாது.

இதன் பதிவு கட்டணம் ரூபாய் 15 ஆகும். இதனை திருத்தம் செய்வதாக இருந்தால் ரூபாய் 20 கொடுத்து திருத்தி கொள்ளுங்கள். புகைப்படம் மற்றும் இதர விஷயங்கள் திருத்தம் செய்ய முடியாத பட்சத்தில் நீங்கள் உங்கள் ஊரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையிடம் செல்லலாம்.

நலவாரிய அட்டை பதிவு


நலவாரிய அட்டை விண்ணப்பம் pdf

நீங்கள் மொத்தம் மூன்று விதமாக விண்ணப்பித்து கொள்ள முடியும். ஒன்று நீங்களே வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இரண்டு பொது சேவை மையம் அல்லது டிஜிட்டல் சேவை மையம் சென்று விண்ணப்பிக்கலாம். மூன்றாவதாக சமூக பாதுகாப்பு துறையில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: ஏ ஷ்ராம் கார்டு பெனிபிட்ஸ் இன் தமிழ்

நலவாரிய அட்டை புதுப்பித்தல் online நலவாரிய அட்டை பயன்கள்

இதனை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வீதம் புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனிலும் டிஜிட்டல் சேவை மையங்களிலும் புதுப்பித்து கொள்ளலாம்.  இதனால் திருமண உதவித்தொகை, கல்வி உதவி தொகை, மகப்பேறு தொகை மற்றும் மற்றும் இதர உதவி தொகைகளை நீங்கள் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்

நலவாரிய அட்டை பதிவு செய்வது எப்படி

1. அடையாள சான்று ( ஆதார், வோட்டர் )

2. புகைப்படம்

3. தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு

4. குடும்ப அட்டை

5. பணி சான்று.

மேற்கண்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னர் டிஜிட்டல் சேவை, சமூக பாதுகாப்பு துறை அல்லது நீங்களே விண்ணப்பித்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கிராம ஊராட்சி எண்ணிக்கை 2023