நலவாரிய அட்டை பயன்கள் என்ன

நலவாரிய அட்டை பயன்கள் என்ன - இன்றைய உலகில் அரசாங்கம் பல நல திட்டங்களை நலவாரியத்தின் மூலம் மக்களுக்கு கொடுத்து வருகின்றது. அதனை நலவாரிய உறுப்பினர்கள் உபயோகித்து பயன்பெறுமாறு பட்டா சிட்டா கோ இன் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

நலவாரிய அட்டை பயன்கள் என்ன


1982 இல் முதன்முதலில் அமைப்புசாரா நல வாரியம் உருவாக்கப்பட்டது . அதனை தொடர்ந்து 1994 இல் கட்டுமானமும் 1999 இல் உடலுழைப்பு தொழில் நல வாரியங்களும் பின்னாட்களில் உருவாக்கப்பட்டது. அரசாங்க வேலை, தனியார் நிறுவன வேலை மற்றும் பிஎப் கணக்கில்லாத அனைவரும் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள முடியும். இதுவரை 18 வகையான நல வாரியங்களும், 54 கட்டுமான தொழில்களும், 60 அமைப்பு சாரா தொழில்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் பார்க்க: முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

1. 10 மற்றும் 11 ஆம் வகுப்புகள் படிக்கின்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1000 ரூபாயும் 12 ஆம் வகுப்பு பயில்கின்ற மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1500 வழங்கப்பட்டு வருகின்றன.

2. பட்டப்படிப்பு மற்றும் விடுதியில் சேர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 3250 வழங்கப்பட்டு வருகிறது.

3. மேற்கண்ட உதவித்தொகை அல்லாமல் தேர்ச்சி பெற்றாலும் அதற்கு ஒரு உதவித்தொகை மற்றும் மேற்படிப்பு படிக்கச் நினைக்கும் மாணவிகளுக்கு கூடுதல் உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும் இதற்கு மாணவியின் தந்தை அல்லது தாய் நல வாரியத்தில் நிச்சயம் உறுப்பினராக இருக்க வேண்டும்.

4. கண் கண்ணாடிக்கு ரூபாய் 500 மற்றும் மூக்கு கண்ணாடிக்கு 750 ரூபாயும் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.

5. மகப்பேறு உதவித்தொகையாக ரூபாய் 6, 000 கொடுக்கப்பட்டு வருகிறது.

6. 60 வயது நிரம்பிய பயனாளிகளுக்கு ரூபாய் 1, 000 ஓய்வூதியமும் அவர்களுக்கு பிறகு ககுடும்ப ஓய்வூதியமாக ரூபாய் 500 வழங்கப்படும்.

7. திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூபாய் 3, 000 மற்றும் பெண்களுக்கு 5, 000 ரூபாயும் உள்ளன. இது குடும்பத்தில் இருமுறை மட்டும் வழங்கப்படும்.

8. இது போன்ற எண்ணற்ற உதவித்தொகையை அரசாங்கம் இந்த வாரியத்தில் மூலம் கொடுத்து வருகிறது.

இதையும் பார்க்க: தமிழக அரசு வீடு வழங்கும் திட்டம்