நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு சட்டம் - நீர்நிலை புறம்போக்கு என்பது மக்கள் வாழும் பகுதிகளில் நீர்நிலைகள் இருப்பது ஆகும். நீர்நிலைகள் என்றால் ஏரி, குட்டை மற்றும் நீர் ஓடைகள் எனவும் கூறலாம். மக்கள் வாழும் பகுதிகளில் நீர்நிலைகள் இல்லாவிட்டாலும் பத்திரத்தில் நீர்நிலை சம்மந்தப்பட்ட வார்த்தைகளை அப்டேட் செய்து இருப்பார்கள். அப்படி உங்களுக்கு நீங்கள் வசிக்கும் வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம் எந்த இடம் என அறிந்து கொள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் உங்கள் ஊர் மற்றும் கிராமம் பெயர் சொன்னால் அது எந்த இடம் என கூறி விடுவார்கள்.
நீர்நிலை பகுதிகளுக்கு கண்டிப்பாக பட்டா இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக சொன்னால் எப்போதும் அந்த இடத்திற்கு பட்டா வாங்கவே முடியாது என்றே சொல்லலாம். அப்படி இருக்கும்போது அந்த இடத்தை நீங்கள் விற்கவோ அல்லது வாங்கவோகூடாது. ஏனென்றால் நீர் நிலை புறம்போக்கு நிலங்களை அரசு எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாம்.
ஒருவேளை அந்த இடத்தை தெரியாமல் ரெஜிஸ்டர் செய்து வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் எனில் அரசு உங்கள் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் வரை வாழ்ந்து கொள்ள முடியும். உங்களிடம் பத்திரமே இருந்தாலும் இந்த இடத்தில் பட்டாவே தான் செல்லும். யாரிடம் நீர்நிலை வாங்கி ரெஜிஸ்டர் செய்தீர்களோ அவர் மேல் புகாரை தெரிவிக்கலாம்.
மக்கள் ஒரு இடத்தில் 30 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்து வந்தாலும் அரசாங்கம் அந்த இடத்தில் அரசு சம்மந்தப்பட்ட வேலைகள் முடிப்பதற்கு ஏதாவது ஒரு ஆர்டர் வந்தால் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களின் நிலங்கள் இல்லாமல் போய் விடும். இதற்கான வழிகள் என்னவென்றால் முன்கூட்டியே நாம் மனைகள் வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து தான் போக வேண்டும்.