நியூ ரேஷன் கார்டு அப்ளை ஆன்லைன் தமிழ்நாடு - புதியதாக ரேஷன் கார்டு அப்ளை செய்ய மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். அதை நீங்களே வெறும் 30 நிமிடத்திற்குள் அப்ளை செய்யலாம். ஏற்கனவே வேறொரு பெயரில் ரேஷன் கார்டு அல்லது ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இருப்பின் முதலில் அதனை நீக்கம் செய்திவிட்டு பிறகு புதிதாய் விண்ணப்பியுங்கள். அதற்கு என்னென்ன தேவையான ஆவணங்கள் வேண்டும் அதன் நிலை என்பதை கீழே காண்போம்.
1. First நீங்கள் PDS இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. அதில் முதல் option யை தேர்வு செய்யுங்கள்
3. செய்த பின்னர் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். உதாரணமாக உங்கள் குடும்ப தலைவர், மனைவி, மகன், மகள், குடும்ப தலைவரின் புகைப்படம், முகவரிக்கான ப்ரூப் ஏதாவது ஒன்று ( ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், தொலைபேசி கட்டணம், எரிவாயு நுகர்வோர் அட்டை மற்றும் இதர ஆவணங்களில் ஏதாவது ஒன்று ).
4. இவை அனைத்தும் முடித்து விட்டு பின்னர் குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும்.
5. குறிப்பு எண் வந்தவுடன் மின்னணு விண்ணப்பத்தின் நிலையை தேர்வு செய்தால் நான்கு நிலைகளை காட்டும். அவைகள், விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுவிட்டது, ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு மற்றும் தாலுகா வழங்கல் இருக்கும். அதில் உங்கள் விண்ணப்ப நிலை எதுவோ அது பச்சை நிறத்தில் காட்டும்.
6. மொத்தமாக தாலுகா வழங்கல் நிலையை வந்தவுடன் உங்கள் நுகர்வோர் மைய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் புதிய மின்னணு அட்டையை பெற்று கொள்ளுங்கள். தங்களது குடும்ப அட்டை நிலை விவரங்களை பார்க்க முடியும்