நில அளவை கட்டணம்

நில அளவை கட்டணம் ( Land survey fees in tamilnadu 2023 ) - வெறுமனே உள்ள நிலங்கள் அல்லது மனைகளுக்கு அளவீடுகள் செய்ய நாம் கிராம நிர்வாக அலுவலத்தில் உள்ள சர்வேயரை அழைப்பது வழக்கமாகும். ஒரு நிலத்திற்கு நிலம் அளப்பவர் வருவதற்கு முன்னர் நாம் அதற்கு முன் அந்த நிலத்தின் வரைபடத்தை, பட்டாவை மற்றும் பத்திரத்தை எடுத்து வைக்க வேண்டும். இம்மூன்றும் இருந்தால் நிலம் அளக்க வசதியாக இருக்கும்.

நில அளவை கட்டணம்


இதற்கு முன் இருந்த கட்டணத்தை விட தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது. இது கடைசியாக வெளியிட்ட அரசாணை எண் 370 சொல்கிறது. இது வெளியிட்ட தேதி 21.07.2020 அன்று நில அளவை 2 ( 2 ) பிரிவு பயன்படுத்தி வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: கிராம பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு

பெறப்படும் கட்டணங்கள்

1. எல்லையை சுட்டி காட்டுதல் - 200

2. கோணமானியை பயன்படுத்துதல் - 300

4. ஒரு பக்க எல்லை - 400

4. உட்பிரிவு ( புன்செய் ) - 2000

5. உட்பிரிவு ( நன்செய் ) - 4000

6. கிராம வரைபடம் - 200

7. உட்பிரிவு கட்டணம் - 400, 500 மற்றும் 600

மேற்கண்ட கட்டணங்கள் புதிதாக வசூலிக்கப்படுகின்றது. இந்த கட்டணங்கள் வருவாய் கிராமங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கேற்ப மாறுபடும்.

இதையும் பார்க்க: சொத்து வரி online payment