நில அனுபவ சான்றிதழ் மாதிரி - நில அனுபவ உரிமை சான்று - அனுபவ பட்டா

நில அனுபவ சான்றிதழ் மாதிரி, நில அனுபவ உரிமை சான்று, அனுபவ பட்டா மற்றும் நில உரிமை சான்று விண்ணப்பம் Pdf - இந்த நான்கு தலைப்புகளும் ஒன்றே தான். இதற்கு ஒரே ஒரு விஷயம் தான் அது தான் அனுபவம் என்று கூறுவோம். பாத்தியம் meaning in English 'possession' என்று அழைப்போம்.

இதையும் படிக்கலாமே: உயில் எத்தனை ஆண்டுகள் செல்லும்

நில அனுபவ சான்று 

ஒருவர் நிலத்தை குத்தகைக்கு விட்டு கண்டுகொள்ளாமல் விட்டு அதனை அவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து அனுபவித்து வந்தால் அவருக்கு நீதிமன்றம் மூலம் அனுபவ சான்று கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நில அனுபவ சான்றிதழ் மாதிரி


அனுபவ பட்டா

இப்பொது குத்தகைதாரர் எப்படி அந்த இடத்திற்கு பட்டா வாங்குவது என்று கேட்டால் அந்த இடத்தை அவர் முறையாக பராமரித்து அதற்கான வரிகள் அவ்வப்போது செலுத்தி நீதிமன்றத்தில் மனு அளித்து அவர் வட்டாச்சியர் மூலம் பட்டாவை கேட்கலாம்.

இதையும் படிக்கலாமே: தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள்

ஆனால் நிலம் உரிமையாளர் உங்களிடம் வருடா வருடம் பணம் வாங்கி வந்தால் அல்லது அவர் நிலத்தை கண்காணித்தே கொண்டு வந்தால் அந்த நிலத்திற்கு நீங்கள் அனுபவ பாத்தியம் வாங்க முடியாது. இது வீடு வாடகைக்கும் பொருந்தும். ஏனென்றால் இப்போது நிறைய பேர் வீடு வாடகை குடியிருக்கிறார்கள். அவர்கள் 12 ஆண்டுகள் மேல் வசித்து இருக்கிறீர்கள் எனில் நீங்களும் அனுபவ பாத்தியம் வாங்க முடியாது என்று சட்டம் சொல்கிறது.

இதையும் படியுங்க: ஜமாபந்தி என்றால் என்ன

ஒருவேளை நீங்கள் ரொம்ப வருடங்களாக அந்த இடத்தில வாழ்கிறீர்கள் என்றால் திடீர் என்று அந்த இடத்திற்கு ஒருவர் வந்து இது என்னுடைய இடம் என்று கூறினால் என்ன செய்வது என்று கேட்டால் நீங்கள் உங்கள் எதிரிடை அனுபவ பாத்தியம் வைத்து கொண்டு முறையிடலாம். 

அதாவது ஒருவர் 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அந்த 5 ஆண்டுகளில் அவர் வருடத்திற்கோ அல்லது மாதத்திற்கோ பணம் வாங்குகிறார். அந்த 5 ஆண்டுகள் மேல் அவர் அந்த குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க தவறி குத்தகைதாரர் அந்த 5 ஆண்டுகள் இல்லாமல் 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தால் அவருக்கு கட்டாயம் அனுபவம் பாத்தியம் நிச்சயம் வரும்.

வழி இல்லாத நிலத்துக்கு வழி

நிலவியல் பாதை என்றால் என்ன

Fb பேஜ்